உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / வெற்றி நிச்சயம்!

வெற்றி நிச்சயம்!

'சினிமாவில் ஆக் ஷன் ஹீரோவாக இருந்தாலும், நிஜத்தில் காமெடியனாக சித்தரிக்கின்றனரே...' என கவலைப்படுகிறார், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர், 1990களில் மலையாளத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர்.அவரது ஆக் ஷன் நடிப்பும், அனல் பறக்க பேசும் வசனங்களும் அப்போதைய ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டன. ஆனால், அவருக்கு நடனமாட தெரியாது. சினிமாவில் மார்க்கெட் போன பின், அரசியலுக்கு வந்தார். தற்போது, கேரளாவின் திருச்சூர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அவரதுசினிமா பிரபலம், அவர் பேசிய வசனங்கள், வெற்றிக்கு கை கொடுக்கும் என பா.ஜ., வினர் நம்புகின்றனர். அங்குள்ள எதிர்க்கட்சி யினரோ, சுரேஷ் கோபியின் நடன காட்சிகளை கிண்டலடித்து, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அவர் நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது போல் இருப்பதாக கிண்டல் வீடியோக்களை பதிவிடுகின்றனர்.இதை சற்றும் எதிர்பார்க்காத சுரேஷ் கோபி, 'ஆக் ஷன் ஹீரோவாக மலையாள மக்கள் மத்தியில் பிரபலமானவன் நான். அரசியலுக்கு வந்ததற்காக என்னை கிண்டலடித்து, வீடியோக்களை பதிவிடுவது எந்த வகையில் நியாயம்...' என, கொதிக்கிறார். அவரது ஆதரவாளர்களோ, 'அட விடுங்க தலைவரே... இதுவும் நமக்கு ஒரு இலவச விளம்பரம் தான். கேரள இளைஞர்கள் மத்தியில் நீங்கள் தான் இப்போது அதிகம் பேசப்படும் நபர். வெற்றி நிச்சயம்...' என, ஆறுதல் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை