உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

ஆபத்தான ஆந்த்ராக்ஸ்ஆந்த்ராக்ஸ் தடவிய கடிதம் என செய்தி படித்திருப்போம். ஆந்த்ராக்ஸ் என்பது 'பாசில்லஸ் ஆந்ராக்சிஸ்' பாக்டீரியாவால் பரவுகிறது. இது கால்நடைகளை அதிகம் தாக்குகிறது. இவை காற்றில் படும்போது ஸ்போர்களாக மாறுகின்றன. இவை நீண்ட நாள் மண்ணில் உயிரோடிருக்கும். இதனால் இந்நோய் பாதித்த கால்நடைகளுக்கு, ஸ்போர்கள் இருக்கும் மண் மூலம் நோய்க்கிருமி தொடர்ந்து பரவுகிறது. இவ்வகை பாக்டீரியாக்கள், விலங்குகளின் உடலுக்குள் சென்று வேகமாக பரவும். சில மணி நேரத்தில் உயிரை பறிக்கும் ஆபத்து மிக்கது.தகவல் சுரங்கம்

உலக ஓமியோபதி தினம்

மாற்று மருத்துவ முறைகளில் ஒன்று ஓமியோபதி. இதை கண்டறிந்தவர் ஜெர்மனி டாக்டர் சாமுவேல் ஹனிமன். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்தநாளான ஏப். 10 உலக ஓமியோபதி தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்தியாவில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஓமியோபதி செயல்படுகிறது. இம்முறையில் ஒருவர் எவ்வாறு நோய்வாய்ப்படுகிறார் என்பதை உணவின் வரலாறு மூலமும், அவருக்கு நிகழ்ந்த மகிழ்ச்சி, கவலை, மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த நிகழ்வுகள் வழியாக அறிந்து அதற்கேற்ப மருந்து வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ