உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

காரணப் பெயர்கள்பூக்காமல், காய்க்காமல் கடைசி வரை வெறும் இலைகளாக மட்டுமே இருப்பதால் வெற்றிலை எனப்பெயர் வந்தது. அதைப்போல பூத்துவிட்டு கடைசிவரை காய்க்காமலே இருக்கும் தாவரத்தை 'காயா' என்றனர். காயா என்பது தமிழ் இலக்கணத்தில் எதிர்மறையை குறிக்கும். காய்க்காமலே இருப்பதால் தான் 'காயா'. தில் மலரும் பூவை காயாம்பூ என்றனர். நீலநிறங் கொண்ட திருமாலை குறிக்க 'காயாம்பூ மேனியன்' எனும் பெயர் இதனால் வந்தது. காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் காயாம்பூ பூத்ததாக தமிழ் இலக்கியம் கூறுகிறது.தகவல் சுரங்கம் பெண்களின் வரலாறு மாதம்மார்ச் 8ல் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மார்ச் மாதம் முழுவதையுமே உலகப்பெண்கள் தினமாக கொண்டாடுகின்றன. 'ஹிஸ் ஸ்டோரி' - 'அவனின் கதை' என்பது தான் 'ஹிஸ்டரி' என மருவியது என்பர். ஆண்களால் எழுதப்பட்ட வரலாறு ஆண்களை மட்டுமே மையப்படுத்தியது; முதன்மைப்படுத்தியது. நாகரிகம், பண்பாடு, வரலாற்றில் பெண்களின் பங்கு குறித்து அறியவும் அறிந்தவற்றைப் பரப்பவும் பெண்களின் வரலாற்று மாதமான மார்ச்சில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !