உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  திருக்கோவிலுார்-ஆசனுார் நான்கு வழிச்சாலை பணி : அதிகாரிகள் ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி

 திருக்கோவிலுார்-ஆசனுார் நான்கு வழிச்சாலை பணி : அதிகாரிகள் ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் -- ஆசனுார் நான்குவழி சாலை பணியின் தரம் குறித்த பொதுமக்களின் சந்தேகம் குறித்த செய்தியை தொடர்ந்து அதிகாரிகள் சாலை பணியை நேரில் ஆய்வு செய்தனர். திருக்கோவிலுார் -- ஆசனுார் நான்கு வழி சாலை பணி வேகமாக நடந்து வருகிறது. பணியின் தரம் குறித்து பொதுமக்களின் சந்தேகம் பற்றிய விரிவான செய்தி படத்துடன் நேற்று தினமலரில் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் நாகராஜ், திருக்கோவிலுார் உதவி கோட்ட பொறியாளர் ஜெயலட்சுமி மற்றும் அதிகாரிகள் சாலை அமைக் கும் பணியை நேரில் ஆய்வு செய்து, திட்ட மதிப்பீட்டின்படி பணியை தரமாக மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினர். அதிகாரிகளின் நேரடி பார்வையில் மட்டுமே பணியை மேற்கொள்ளவும், சாலை பணி நடைபெறும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை மற்றும் ரிப்லேட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை