உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / நாதியற்ற நதி மண் கடத்தல் கும்பல் அட்டூழியம்; காணாமல் போகிறது நீர் வழித்தடம்

நாதியற்ற நதி மண் கடத்தல் கும்பல் அட்டூழியம்; காணாமல் போகிறது நீர் வழித்தடம்

பொங்கலுார்:நொய்யல் நதியின் கிளை நதியான உப்புக்கரை நதி ஆக்கிரமிப்புகளால் சிதைந்து வருகிறது. இங்கு லோடு லோடாக மண் வெட்டி கடத்தப்படும் சம்பவங்களும் நடப்பதால், நீர் வழித்தடமே காணாமல் போகிறது.ஒரு காலத்தில் நுங்கும் நுரையுமாக பாய்ந்துகொண்டிருந்த நொய்யல் நதியே இன்று சிற்றோடை போல் மாறிவிட்டது. வெள்ள காலங்களில் மட்டுமே, நதி போல், நீர் பிரவாகத்தைப் பார்க்க முடிகிறது.நொய்யலுக்கே இந்த கதி என்றால், இதன் கிளை நதிகளைக் காணாமல் போகச் செய்ய மண் கடத்தல் கும்பல்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன.நொய்யல் நதியின்கிளை நதியான உப்புக்கரை நதி, பொங்கலுார் ஒன்றியம், அலகுமலையில் துவங்கி ஆண்டிபாளையம், பெருமாள் மலை, சிவன்மலையில் உருவாகும் ஓடைகளுடன் இணைந்து காங்கயம் ராமலிங்கபுரம் அருகே நொய்யல் நதியில் கலக்கிறது. இந்த நதி தோன்றும் இடமான அலகுமலையிலேயே ஆக்கிரமிப்புகள் துவங்கி விடுகிறது.முதுமக்கள் தாழி, தங்க காசுகள், இரும்பினால் ஆன கொல்லன் பட்டறைக்கற்கள் என பல்வேறு தொல்பொருள் எச்சங்கள் இந்த நதிக்கரையில் இன்றளவும் காணக்கிடக்கின்றன.நதிக்கரையில், பொங்கலுார் ஒன்றியம், கருங்காலிபாளையம் அருகே ஒரு கும்பல் இரவு நேரங்களில் மண்ணை வெட்டி லோடு லோடாக கடத்தி வருகிறது. நதியின் நீர் வழித்தடமே காணாமல் போகிறது.உப்புக்கரை நதியை மீட்க வேண்டும்; மண் கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விடுக்கும் தொடர் கோரிக்கைகள், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் செவிப்பறைகளை இன்னும் எட்டாமலேயே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A P
ஜூன் 24, 2024 22:04

இப்படி கள்ளத்தனமாக மணல் திருடுபவனெல்லாம், ஒரு அப்பனுக்குப் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள் .


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ