உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / அமெரிக்காவில் ஹனுமன் 90 அடி மெகா சிலை திறப்பு

அமெரிக்காவில் ஹனுமன் 90 அடி மெகா சிலை திறப்பு

ஹூஸ்டன் : அமெரிக்காவில், பிரமாண்டமான 90 அடி உயர ஹனுமன் சிலை திறக்கப்பட்டது. இது, அந்நாட்டின் மூன்றாவது உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சுகர்லேண்டில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில், ஹனுமன் சிலை நிறுவுவதற்கான பிராண பிரதிஷ்டை விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது.கடந்த 18ம் தேதி நடந்த விழாவில், வேத மந்திரங்கள் முழங்க பிரமாண்டமான 90 அடி உயர ஹனுமன் சிலை, பக்தர்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது. 'ஸ்டேட்யூ ஆப் யூனியன்' என்றழைக்கப்படும் ஒற்றுமைக்கான இந்த சிலை, ராமாயணத்தில் சீதையும், ராமரும் ஒன்றுபட உதவிய ஹனுமனின் பங்கை நினைவூட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.விழாவின் போது, ஹனுமனின் பிரமாண்ட சிலைக்கு ஹெலிகாப்டர் வாயிலாக மேலிருந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மலர்கள் துாவப்பட்டன. அதுமட்டுமின்றி, 72 அடி நீள மலர் மாலையும் ஹனுமன் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சின்ன ஜீயர் சுவாமிகள், 'இந்திய பாரம்பரியத்தின் பெருமையாகவும், ஆன்மிக ஒற்றுமையின் அடையாளமாகவும் இந்த சிலை உள்ளது' என்றார்.டெக்சாஸ் மாகாணத்தின் மிக உயரமான சிலை என்ற கவுரவத்தை இந்த சிலை பெற்றுள்ளது. அது மட்டுமின்றி, நியூயார்க்கில் உள்ள சுதந்திரா தேவி சிலை, புளோரிடாவில் உள்ள பெகாசஸ் - டிராகன் சிலைக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சிலை என்ற பெருமையை ஹனுமன் சிலை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ