உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / காசியில் மோடி டீ அருந்தி பிரபலமான கடை

காசியில் மோடி டீ அருந்தி பிரபலமான கடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உத்தரபிரதேசம் வாரணாசியில் அஸ்சி கார்ட் பகுதியில் பிரதமர் மோடி விரும்பி டீ சாப்பிட்ட கடை இப்போது பிரபலமாகி விட்டது.'பப்பு சாய் ' என்றழைக்கப்படும் இக்கடை 85 வருட பழமையானது. தாத்தா, அப்பாவை தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக தற்போது பேரன் சதீஷ் நடத்தி வருகிறார். 2022 ல் வாரணாசி வந்த பிரதமர் மோடி இந்த டீக்கடைக்கு வந்து டீ குடித்தார். டீயின் ருசியால் கவரப்பட்ட அவர் மீண்டும் கேட்டு அருந்தினார். மோடி டீ அருந்திய கடை என்ற புகழ் பரவி, தற்போது ஒரு நாளைக்கு 500 பேர் வரை இங்கு டீ குடிக்கின்றனர். சுற்றுலா பயணிகளும் கடையை பார்ப்பதற்காகவே அதிகமாக வருகின்றனர். டீ விலை 15 ரூபாய். வாரணாசியின் எந்த மூலையில் இருந்தாலும் பப்பு சாய் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோக்காரர்கள், ரிக் ஷாகாரர்கள் இங்கு அழைத்து வந்து விடுகின்றனர். சதீஷின் தந்தையை டில்லிக்கு அழைத்து பிரதமரே பாராட்டியுள்ளார். நீங்களும் காசிக்கு சென்றால் இந்த கடையில் டீ குடித்து, டீமாஸ்டர், கேஷியர் என அனைத்து பணிகளையும் பார்க்கும் சதீஷை வாழ்த்தி விட்டு வாருங்கள்.

--நமது நிருபர்--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
மே 31, 2024 16:51

தமிழக முதல்வர் உறிஞ்சாமலேயே டி குடிப்பது போல ..... இப்படி ஒரு வீடியோ ஷேர் செய்திருந்தார்கள் ...


Sampath Kumar
மே 31, 2024 11:06

இனி கன்யாகுமரியில் பஜ்ஜி போண்டா கடையில் இவரு சாப்பிட்டாரு என்று போடுவானுக எல்லாம் விளம்பர யுக்தி


naranam
ஜூன் 01, 2024 00:47

ஐயோ என்ன ஒரு வயித்தெரிச்சல் சம்பத்து!


duruvasar
மே 31, 2024 10:43

சென்னைஅண்ணா நகரில் அந்த பரோட்டா கடைக்கு மட்டும் ஏன் யாரும் செல்ல மறுக்கிறார்கள். அந்த சர்க்கரை கலந்த பதனி விற்றவரும் இப்போது தொழிலை விட்டுவிட்டதாக சொல்கிறார்கள். என்ன கோபால் இது மெய்யாலுமா


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ