உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / வறட்சியிலும் பேரிச்சை சாகுபடி; தர்மபுரி விவசாயி அசத்தல்

வறட்சியிலும் பேரிச்சை சாகுபடி; தர்மபுரி விவசாயி அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி : ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டும் விளைவிக்கப்படும் பேரிச்சையை, தர்மபுரி மாவட்டம், அரியாகுளத்தில் நிஜாமுதீன், 67, என்ற விவசாயி பயிரிட்டு, கடும் வறட்சியிலும் அமோக விளைச்சலை பெற்றுள்ளார்.சவுதி அரேபியாவில் பேரிச்சை பண்ணையில் பல ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பேரிச்சை கன்றுகளை இறக்குமதி செய்து, தன் நிலத்தில் பயிரிட்டார். சில ஆண்டுகளில் நல்ல விளைச்சல் கிடைத்ததை தொடர்ந்து, அவருடைய நிலத்தில், 15 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறார். அதில், பர்ரி, கான்ஜி, நுார் போன்ற திசு வளர்ப்பு செடி, தர்மபுரியின் கடும் வறட்சியை தாங்கி நல்ல விளைச்சலை தந்துள்ளது.நிஜாமுதீன் கூறியதாவது: ஒரு கிலோ பேரிச்சையை, 150 முதல், 200 ரூபாய் வரை மொத்த வியாபாரிகள், பண்ணைக்கே வந்து வாங்கி செல்கின்றனர். இந்த மரங்கள், 90 ஆண்டுகள் வரை காய்க்கும் தன்மை கொண்டது. பேரிச்சை சாகுபடியை ஊக்கப்படுத்த, தமிழக அரசு மானியத்தை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
ஆக 10, 2024 06:11

இதை பற்றி அறிந்து கொள்ள மிகவும் முயன்று அங்கே சென்றால் பேரிட்சை வாங்கி போங்க என்று விலைப்பட்டியல் கொடுத்தார்கள் , அவர்களின் பில்டிங் அருகில் மூன்று பேரிட்சை மரங்களை கண்டேன் , சாகுபடி எப்படி என்று அறிந்து கொள்ள சென்று ஏமாற்றம் தான்


ANBARASAN M
ஜூலை 25, 2024 21:41

அருமை!எனக்கும் பேரிச்சை நடவு செய்யணும்–னு தோன்றுகிறது


Shekar Thorali
ஜூலை 25, 2024 21:06

Good


rama adhavan
ஜூலை 25, 2024 17:38

வாழ்த்துக்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். அரசு உதவி செய்யலாம் விவசாயத் துறை மூலம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை