UPDATED : மே 01, 2024 08:59 AM | ADDED : மே 01, 2024 01:38 AM
கோவை மாவட்டத்தில், கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு வெயில் வாட்டி எடுக்கிறது.இந்த கடும் வெயிலிலும் ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டட தொழிலாளிகள், சுகாதார பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டியில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகள், தார் சாலை போடுபவர்கள் உள்ளிட்டோர் வேறு வழியின்றி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இவர்களின் வருவாயை நம்பிதான் குடும்பத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, மளிகை, போக்குவரத்து இப்படி அத்தனையும் உள்ளது. இதனால், எவ்வளவுதான் வெயில் சுட்டெரித்தாலும், பிழைப்புக்காக வெளியில் இறங்கியே ஆக வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு.குடும்பத்துக்காக பாடுபடும் இவர்களுக்கு, ஒரு பெரிய சல்யூட்!