உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தினமலர் நாளிதழை போலவே வினியோகிப்பவரிடமும் நேர்மை

தினமலர் நாளிதழை போலவே வினியோகிப்பவரிடமும் நேர்மை

கோவை: கோவை சிங்காநல்லுார் பகுதியில், தினமலர் நாளிதழ் வினியோகம் செய்து வருபவர் மகாமுனி. இவர், சிங்காநல்லுாரில் உள்ள தியாகி சண்முகா நகர் அபார்ட்மென்டுக்கு, தினமலர் நாளிதழ் வினியோகம் செய்ய சென்றுள்ளார்.அப்போது அந்த அபார்ட்மென்ட் காம்பவுண்டுக்குள், இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் தரையில் கிடந்துள்ளன. அதை எடுத்த அவர், அங்கு வசிக்கும் முத்துகுமாரசாமி என்பவரிடம் கொடுத்து, ''இது யாருடைய பணம் என தெரியவில்லை. உங்கள் காம்பவுண்டுக்குள் கிடந்தது. விசாரித்து கொடுத்து விடுங்கள்,'' என கூறி பணத்தைக்கொடுத்து விட்டு சென்று விட்டார். இது குறித்து, முத்துகுமாரசாமி கூறுகையில், ''எங்கள் அபார்ட்மென்டுக்கு பல வருஷமாக, இவர் பேப்பர் போடுகிறார். பணம் குறித்து விசாரித்து, உரியவரிடம் கொடுத்து விட்டேன். இந்த காலத்தில் இப்படியும் நேர்மையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை, பார்க்கும் போது வியப்பாக உள்ளது. எங்கள் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், அவரை அழைத்து பாராட்ட இருக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Krishnan C
ஆக 02, 2025 21:15

நல்ல மனம்


Subramanian
ஆக 02, 2025 07:52

வாழ்த்துகள்


பிரேம்ஜி
ஆக 02, 2025 07:49

நல்ல மனிதர்! மகாமுனியின் நேர்மையை பாராட்டுகிறோம்! அவர் என்றும் வாழ்க வளமுடன்!


KRISHNAN R
ஆக 01, 2025 20:07

நல்ல முனி


KRISHNAN R
ஆக 01, 2025 08:55

இவர் மகாமுனியோ..... இல்லையோ... நேர்மை முனி.. வாழ்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை