உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இந்த புளுகு போதுமா... இன்னும் வேணுமா?

இந்த புளுகு போதுமா... இன்னும் வேணுமா?

அ.சிரில் சகாயராஜ், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகமே 'வியக்கும்' வகையில், ஓர் அண்டப்புளுகு புருடாவை, எம்.ஜி.ஆரின் மானேஜராக பணிபுரிந்த, ஆர்.எம்.வீரப்பன் மறைந்த தினத்திற்கு மறுநாள் துணிந்து அரங்கேற்றி இருக்கிறார், தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி.அப்படி என்ன புளுகி விட்டார் என்று பார்ப்போமா?'எம்.ஜி.ஆர்., 1967 தேர்தலில் பரங்கிமலையில் நிற்க டிபாசிட் கட்டியவன் நான். எம்.ஜி.ஆரை., எம்.ஆர்.ராதா சுடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் வரை, அவர் என்னுடன் தான் இருந்தார்.'என் மீதும், துரைமுருகன் மீதும், எம்.ஜி.ஆர்., பாசமாக இருந்தார். நாங்கள் இருவரும் அவர் பின்னால் சென்றிருந்தால், எங்கேயோ போயிருப்போம். ஆனால், ஒரே லட்சியத்தோடு தி.மு.க.,வில் இருக்கிறோம்' என்று புளுகி, புளகாங்கிதம் அடைந்து இருக்கிறார்.எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர்., சுடப்பட்டது, 12-.01-.1967 அன்று மாலை, 05:00 மணிக்கு. அப்போது, எம்.ஆர்.ராதாவுடன் இருந்தவர், பெற்றால் தான் பிள்ளையா படத் தயாரிப்பாளர் வாசு.அந்த நேரத்தில் இந்த ஆர்.எஸ்.பாரதி எங்கே இருந்திருப்பார்?எம்.ஜி.ஆரின் அலுவலக நிர்வாகி, ஆர்.எம்.வீரப்பன். கடந்த 1967 பிப்ரவரியில், சட்டசபை தேர்தல் நடந்தது. வேட்புமனு தாக்கலின்போது, எம்.ஜி.ஆர்., சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மானேஜர் ஆர்.எம்.வீரப்பனை தான் டிபாசிட் கட்டச் சொல்லி இருப்பாரே தவிர, இந்த அண்டப்புளுகரிடம் கண்டிப்பாய் சொல்லி இருக்க முடியாது.எம்.ஜி.ஆர்., மறைந்தது, 24-.12-.1987 அன்று. ஏறக்குறைய, 37 ஆண்டுகள் ஆகின்றன.இந்த, 37 ஆண்டுகால இடைவெளியில், இந்த அண்டப் புளுகர், இது குறித்து என்றாவது வாய் திறந்திருக்கிறாரா? ஏனெனில், ஆர்.எம்.வீரப்பன் உயிருடன் இருந்தார். அவர் மறைந்த அடுத்த நாள், இந்த அண்டப்புளுகர், 'டுபாக்கூரை' அடித்து விட்டிருக்கிறார். ஓட்டு கேட்க, இந்த புளுகு போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?

அரசின் தரத்தை என்னவென்று சொல்வது!

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், ஹிந்து பெண்கள், திருமணமான பின், தலையில் உச்சிப்பொட்டு வைப்பதை, தி.மு.க., பேச்சாளர் லியோனி, பரிகாசமாகப் பேசியிருந்தார்.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?'நெற்றி உச்சியில் பெண்கள் பொட்டு வைக்கக் காரணம், பின்னாடியே பசங்க சுத்த மாட்டாங்கங்கிறதுக்காக தான்' என்ற அர்த்தத்தில் பேசியுள்ளார். அறிவியல் காரணங்கள் இவருக்குத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை; அறிவே இல்லாமல்பேசுவது அபத்தமாய் இருக்கிறது.'ராதிகாவுக்கு ஓட்டு போடாதீர்கள்; வேண்டுமானால் அவர் கன்னத்தில் முத்தமிடுங்கள்' என்று பேசியிருக்கிறார்.இவர் பேச்சை கேட்க வந்த பெண்கள், கூனிக் குறுகினரே தவிர, யாரும் எதிர்த்து பேசவில்லை; அவர் வாயை அடக்கவில்லை.இவர், பள்ளி ஆசிரியராக இருந்தவர்; மாணவர்கள் கதி என்ன ஆகி இருக்கலாம் என்று யோசித்துப் பாருங்கள்!வாயால் வடை சுடுவதில் பிரியமானவர்; அதனால், தொலைக்காட்சிகளில் பேச வாய்ப்பு கிடைத்தது. தனக்கு நிகழ்ச்சிகள் தர வேண்டும் என்று மிரட்டி மிரட்டி சிலர் காசு வாங்குவர்; அந்த வகையறாக்கள் போல இவர் இருக்க மாட்டார் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.கலைஞர் தொலைக்காட்சியில், 'நன்றாகப் பேசுவோம், நல்லதை பேசுவோம்' என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்த லியோனி, தி.மு.க.,வின் முழுநேர பேச்சாளராக ஆன பிறகு, நல்லதை பேசியதாக வரலாறே இல்லை. இப்படிப்பட்ட நபருக்கு, தமிழ்நாடு பாடநுால் நிறுவன தலைவர் பதவி கொடுத்த, தி.மு.க., அரசின் தரத்தை என்னவென்று சொல்வது!

சம்பந் தப்பட்ட நபர்களுக்கு புரிந்தால் சரி!

சுப்ர.அனந்த ராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 1967ல் தமிழகத்தைப் பீடித்த கொடிய வைரஸ் நோயாக, எந்தெந்த கட்சிகள் உருவாகின என்பது நமக்குத் தெரியும். அது போல, மஹாராஷ்டிராவில் பீடித்த கொடிய கொள்ளை நோய் சிவசேனா.அராஜக வெறியர்களின் வன்முறைக் கூட்டம் அது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், மஹாராஷ்டிரா மராத்தியருக்கு மட்டும் என்ற முழக்கத்துடன், தென் மாநில மக்களை, மும்பையை விட்டு விரட்டிய அமைப்பு அது.மலையாளிகள், தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் என அனைவரையும், 'மதராசி'கள் என்ற ஒரே அடைமொழி இட்டு அழைத்து, விரட்டிய கூட்டம் அது.தென் மாநில ஏழை தொழிலாளர்களை குறி வைத்து தாக்கி விரட்டிய சிவசேனா மராத்திய வெறியர்கள், 20 ஆண்டுகளுக்கு முன், இதே போல, பீஹார், உ.பி., ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய வட மாநில ஏழை மக்களை குறி வைத்து தாக்க ஆரம்பித்தனர். இவ்வாறு தாக்கப்பட்ட வட மாநில, வட மேற்கு மாநில மக்கள் அனைவரும், பிழைக்க வேறு மார்க்கமில்லாமல், மும்பையில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகின்றனர்.கட்சி நிறுவனர் பால் தாக்கரே உயிருடன் இருந்தபோது, ஆட்சி நடத்தி இருக்கிறார். ஆனால், முதல்வராக அல்ல; 'மாதோஸ்ரீ' என்ற அவரது அரண்மனையில் இருந்தபடியே கட்சியையும், ஆட்சியையும் ஆட்டிப் படைத்தார். பால் தாக்கரேயின் மருமகன் ராஜ் தாக்கரே, கட்சியைக் கைப்பற்ற முயன்று, தோல்வி அடைந்து, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்று தனியே கட்சி துவக்கி விட்டது வேறு கதை.முதல்வர் ஆசை உத்தவை தொற்றிக் கொண்டது. தேர்தலில் வென்று, முதல்வர் ஆனார். பின், பங்காளி சண்டை ஏற்பட்டு, பா.ஜ.,வால் உடைக்கப்பட்டு, ஷிண்டே சிவசேனா உருவானது; இப்போது, ஷிண்டே தான் முதல்வர்.உத்தவ் தாக்கரே, இளைத்துப் போன சோனி சிவசேனாவின் தலைவராக இருக்கிறார்!காங்கிரசும், சரத் பவார் கம்பெனியான ஒரு குடும்பக்கட்சியும் இணைந்து, ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ளன.இத்தனை கதை எதற்கு... கடவுளின் லீலை வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பதை சொல்லத் தான்!வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., உடன் கூட்டணி கைகூடவில்லை. பா.ஜ., - ஷிண்டே கூட்டணி, 'அம்பேல்' தான் இனி.ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எண்ணெய் பிசினஸ், வாட்டர் பிசினஸ் என தண்டல்காரர்களை வைத்தே வியாபாரம் செய்வது தான் சிவசேனாவின் அடிப்படை தொழில்; இனி, எல்லா வியாபாரமும் படுத்துவிடும். மொத்த சிவசேனாவும் அப்பளம் போல் நொறுங்கி விடும்.வாரிசு அரசியலில், பங்காளி சண்டை ஏற்பட்டு, கட்சி அப்பளம் ஆகும் என்பது, இறைவன் வைத்துள்ள விதி.சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி!---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

இராம தாசன்
ஏப் 24, 2024 20:12

தலீவர் எப்போதும் இறந்தவரை பற்றி தான் பேசுவார் -உயிருடன் இருக்கும் வரை பேச மாட்டார் - இந்த தொண்டரும் அதையே செய்கிறார்


கனோஜ் ஆங்ரே
ஏப் 20, 2024 17:42

அறிவாளி சாகயராஜ் அவர்களே ஆர்எஸ்பாரதி யார்னே உனக்கு தெரியாது டிவிலேயும் பேப்பர்லேயும் வந்த போட்டோவ பார்த்துட்டு, உன் கற்பனை கதையை எழுதி சொறிந்து கொண்டுள்ளீர் சந்தோஷம் முதலில், ஆர்எஸ்பாரதி யார் என்பதையும் அவர் வரலாற்றையும் தெரிந்து கொள் சட்டக்கல்லூரியில் சட்டம் பயிலும்போதே அறிஞர் அண்ணாவிடம் சென்று திமுகவில் இணையப் போகிறேன் என்று சொன்னபோது முதலில் படித்து முடித்துவிட்டு வா பின்னர் அரசியலில் சேரலாம் என்ற அறிவுரைகேட்டு அதன்படி சட்டம் பயின்றவர் இப்ப இல்ல களிலேயே அதுமட்டுமல்ல அன்று இருந்த திமுக தலைவர்களில் எம்ஜிஆர் இராமாபுரம் வீட்டுக்கருகில் ஆலந்தூரில்தான் இவர் பிறந்ததும், வசித்ததும் அதன்பேரில் திமுகவில் இருவரும் இருந்த காரணத்தால் அத்துடன் தன் ஊர்காரர் என்பதால், ஆர்எஸ்பாரதியுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தார் ஆர்எஸ்பாரதி, அத்துடன் சட்டம் பயின்றவர் அதனால் அவரை உடன் வைத்துக் கொண்டவர் எம்ஜிஆர் காலை முதல் மாலை வரை எம்ஜிஆருடனே இருந்தவர் பரங்கிமலை தொகுதியில் எம்ஜிஆர் நின்றபோது, அவருக்கு தேர்தல் பணியாற்றியவர் எம்ஜிஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் இவ்வளவு நெருக்கமாக இருந்தும், கலைஞரை விட்டு பிரிந்த எம்ஜிஆர், இவரை அவருடன் அழைத்தபோதும், இவர் கலைஞருடனே இருப்பதாக சொன்னவர்கள் இருவர் ஒருவர் துரைமுருகன், இன்னொருவர் இவர் நீங்க என்னவோ, ஆர்எம்வீரப்பனுக்கு பக்கத்து வீட்டுக்காரன் மாதிரியும், இல்ல எம்ஜிஆர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரன் மாதிரியும் கதை எழுதியிருக்கீங்க நீங்க நேர்ல பார்த்த நிகழ்வு மாதிரி எழுதியிருக்கீங்க சரி இறுதியா ஒரே ஒரு கேள்வி எம்ஜிஆரை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா அவருடன் பேசி பழகியதுண்டா அவரை நேரில் பார்க்காதபோதே கம்பி கட்ற கதையெல்லாம் சொல்லி புளுகாண்டியா திரியாதீங்க


rama adhavan
ஏப் 21, 2024 00:23

ஆலந்தூருக்கும் ராமாவரம் தோட்டதுக்கும் காத தூரம் பாரதி போன்ற ஆட்களுடன் எம்ஜிஆர் சாவகாசமே வைக்க மாட்டார் இவரைப் பற்றி எம்ஜிஆர் எந்த இடத்திலும் சொன்னதே இல்லை எம்ஜிஆர் உடன் பழகியவர்கள் கூட சொன்னது இல்லை நான் ஓரிரு தரம் புரட்சி தலைவரை கண்டு இருக்கிறேன்ல் திருச்சியிலும், பின் முதல்வர் ஆன பின் தலைமை செயலகத்திலும் எனவே புருடா வேண்டாம்


Rajarajan
ஏப் 20, 2024 12:16

மறைந்தவர் இருந்திருக்கணும் அண்ணனுக்கு இந்நேரம் புதூர் கட்டு போட்டிருப்பார்


veeramani
ஏப் 20, 2024 08:56

பாரத்ரத்தினா பெண்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களை பற்றி எவர் வேண்டுமானாலும் பேசலாம் நானும் தான் அவர் அருப்புக்கோட்டை தொகுதியில் சட்டசபை வேட்பாளராக நின்றபோது வேலை பார்த்துள்ளேன்


VENKATASUBRAMANIAN
ஏப் 20, 2024 08:10

ஆர்எஸ்பாரதி லியோனி போன்றவர்கள்தான் திமுகவின் முகம் இதிலிருந்தே தெரியும்


Dharmavaan
ஏப் 20, 2024 07:58

திருட்டு கட்சி லியோனி,சுப வீரன் போன்றவர்கள் நாட்டை கெடுக்கும் கல்வியில் இருப்பது பேராபத்து


NicoleThomson
ஏப் 20, 2024 07:09

தமிழக கார்பொரேட் குடும்பம் உங்களின் கருத்துக்களை பிடிக்குமா


Duruvesan
ஏப் 20, 2024 09:51

விடியளு துண்டு சீட்டே தப்பா படிக்கும்


முக்கிய வீடியோ