உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / வடை வேணும்னா சுடுவாங்க!

வடை வேணும்னா சுடுவாங்க!

திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயிகளின்பிரச்னைகளை சுட்டிக்காட்டி பேசினர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பழனிசாமி பேசுகையில், 'தாராபுரம் அடுத்த அலங்கியத்தில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். காட்டுப்பன்றிகள் சோளத்தை சேதப்படுத்துகின்றன. 'வதவத'ன்னு குட்டி போட்டு பெருகிடுது. பக்கத்து மாநிலமான கேரளாவில், வாய் வெடிமருந்து வெச்சு காட்டுப்பன்றிகளை விரட்டுறாங்களாம். இங்கேயும் அதே மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.விவசாயி ஒருவர், 'நம்ம ஊர்ல வாயில வடை வேணும்னா சுடுவாங்க... காட்டுப்பன்றிக்கு வெடி வைப்பாங்களான்னு சந்தேகம் தான்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை