உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / வெண்கல கிண்ணம் கேட்பாரோ!

வெண்கல கிண்ணம் கேட்பாரோ!

தஞ்சாவூரில், தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய எம்.பி.,க்கு நடந்த பாராட்டு விழாவில், தமிழக அமைச்சர்கள் மகேஷ், மற்றும் ராஜா பங்கேற்றனர். நிகழ்ச்சியில், தஞ்சாவூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., நீலமேகம் பேசுகையில், 'நம் மாவட்ட செயலர் சந்திரசேகரன், லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டு வாங்கிக் கொடுத்த நிலையில், முதல்வரிடம் 6 சவரன் தங்கச் சங்கிலியை பரிசாக பெற்றுள்ளார். தஞ்சாவூர் சட்டசபை தொகுதியிலும் நமக்கு, 67,000 ஓட்டுகள் வித்தியாசம் கிடைத்துள்ளது' என்றார்.இதைக் கேட்ட கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'மாவட்ட செயலருக்கு தங்கச் சங்கிலி கொடுத்த முதல்வர், எனக்கு ஒரு வெண்கல கிண்ணமாவது கொடுக்க வேண்டும்னு கேட்பாரோ...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை