உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / காரியத்தை முடிச்சிட்டாரே!

காரியத்தை முடிச்சிட்டாரே!

தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த மேயர் ராமநாதன் தலைமையில் நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர், மாநகராட்சி கடனில் இருப்பதாகவும், கடைகள் ஏலம் விடுவதில், 32 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதால், இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கேட்டனர். அப்போது, மேயர் ராமநாதன், கவுன்சிலர்கள் கேள்விக்கும், குற்றச்சாட்டுக்கும் பதில் அளிக்காமல், 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி' என பேசியதால், அ.தி.மு.க.,வினர் கூச்சலிட்டு வெளிநடப்பு செய்தனர். இதைப் பார்த்த மாநகராட்சி அதிகாரிகள், 'பதில் சொல்ல ஒன்றுமில்லைன்னா, எதிர் தரப்பை டென்ஷன் பண்றது தானே இவங்க வழக்கம்... காரியத்தை கனகச்சிதமா முடிச்சிட்டாரே...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஜூலை 03, 2024 17:02

இதையேதான் முதல்வரும் செய்கிறார் கள்ளச்சாராய மரணங்களுக்கு பதில் அளிக்க, 'அதிமுக ஆட்சியில் இத்தனை மரணங்கள்' எங்கள் ஆட்சியில் என்ன, ஒரு பத்தெட்டு கூட. இதற்கெல்லாமா எதிர்க்குரல்? என இதே 'பழி மாற்றும்' டெக்னீக்கைதான் இவர் செய்கிறார்


Varadarajan Nagarajan
ஜூலை 03, 2024 06:40

பழைய பேரூந்து நிலையம் அருகில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பல அடுக்கு கார் பார்க்கிங் ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் பயணியர் அமர ஒரு இருக்கைகூட அமைக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பல சோலார் தெருவிளக்குகள் பழுதடைந்து உள்ளது. புதிதாக மைக்கப்பட்ட சாலைகள் ஓராண்டுக்குள் பல இடங்களில் மீண்டும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானம் முதல் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி வரை நடைபாதைகளில் அமைக்கப்பட்ட ஓய்வு பெஞ்சிகள் காணவில்லை. நமது இளம் மேயர் இவைகளையும் கவனித்து நடவடிக்கையெடுத்தால் நல்லது


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 03, 2024 20:45

அது எப்படி நடவடிக்கைகள் எடுப்பார்கள், கமிஷன் வாங்கியதே இவர்கள் தானே.


முக்கிய வீடியோ