உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவங்க எப்படி வந்தாங்க?

இவங்க எப்படி வந்தாங்க?

துாத்துக்குடி மாவட்டம், கீழவல்லநாடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பங்கேற்று, மாணவ - மாணவியருடன் கலந்துரையாடினார். அப்போது பேசுகையில், 'உங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள். பிடித்த துறையில் தான், நமக்குப் பிடித்த விஷயத்தை மகிழ்ச்சியோடு செய்ய முடியும். மற்றவர்களை பார்த்து, துறையை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சி இருக்காது' என்றார்.இதைக் கேட்ட மாணவி ஒருவர், 'மற்றவர்களைப் பார்த்து துறையை தேர்வு செய்தால் மகிழ்ச்சி இருக்காது... பிடித்த துறையை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்னு மேடம் நமக்கு அட்வைஸ் பண்றாங்க, சரி... இவங்க அரசியலை பிடித்து போய் தேர்ந்தெடுத்தாங்களா அல்லது அவங்க அப்பா, அண்ணனை பார்த்து வந்தாங்களான்னு சொல்லலையே...' என முணுமுணுக்க, சக மாணவியர் சத்தமின்றி சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Raghavan
ஜூலை 16, 2024 16:57

ஒரு பழமொழி சொல்லுவார்கள் " வாக்கை விற்பவருக்கு வாத்தியார் வேலை போக்குவரத்தை சரிசெய்பவருக்கு போலீஸ் வேலை என்று அத்துடன் இதையும் சேர்த்து சொல்லவேண்டும் "வாயால் வடைசுடுபவர்களுக்கு அரசியல் வேலை". மாதாமாதம் மின்சாரம் கணக்கெடுப்பு, அண்ணன் போதும் முதல் கையெழுத்தே டாஸ்மாக் ஒழிப்பு என்று இன்னும் ஏகப்பட்ட கணக்கில் அடங்காத வாக்குறுதிகளை கொடுத்தே ஆட்சியை பிடித்தவர்கள்


D.Ambujavalli
ஜூலை 16, 2024 16:48

ரொம்பவே விவரமாக இருக்கிறார்கள் சபாஷ்


என்றும் இந்தியன்
ஜூலை 16, 2024 15:37

அருமை அருமை மாணவிகளே உண்மையான வார்த்தைகள்


புதிய வீடியோ