உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இது தானா சார் உங்க டக்கு?

இது தானா சார் உங்க டக்கு?

தமிழகத்தில் போதை பொருள் விற்பனை, அது தொடர்பான சட்டம் -- ஒழுங்கு பிரச்னையால், எதிர்க்கட்சிகள் தி.மு.க., அரசை வறுத்தெடுக்கின்றன. இதனால் மற்ற வழக்குகளுக்கு வாய் திறக்காத போலீசார், கஞ்சா வழக்குகளில் பத்திரிகைகளுக்கு தாமாக முன்வந்து செய்தி தருகின்றனர்.இந்த வகையில், மதுரை நகரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு காலி இடத்தை குறிப்பிட்டு, அங்கு கஞ்சா புகைப்பதாக, 'மொட்டை' கடிதம் வந்தது. அப்போது அதை துாக்கி ஓரம் வைத்த போலீசார், தற்போது கஞ்சா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு, குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.அங்கு வீடு கட்டி ஒருவர் வசிப்பது தெரியவரவே, அவரிடம் கடிதத்தை காண்பித்த போலீசார், 'தற்போது கஞ்சா எதுவும் இங்கு இல்லை' என, உரிமையாளரிடம் எழுதி வாங்கினர். இதையறிந்த அப்பகுதி குடியிருப்போர், 'இது தானா சார் உங்க டக்கு...?' என, கருணாஸ் பட காமெடி வசனத்தை கூறி, போலீசாரை கலாய்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 01, 2024 06:30

போலீசின் சுறுசுறுப்பு புல்லரிக்க வைக்கிறது பத்தானுகளுக்கு முன் எங்காவது ஊடுபயிராக வைத்திருந்த. கேஸ் ஏதாவது தேடிபிடித்து கணக்கு காட்டுவார்கள் கண் எதிரே புழங்குவதை ‘வாங்கிக்கொண்டு’ விட்டுவிடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை