உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அமைச்சர் உஷாரா இருக்கார்!

அமைச்சர் உஷாரா இருக்கார்!

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், புதிதாக கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மைய கட்டுமான பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். அப்போது நிருபர் ஒருவர், 'மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களுக்கு நிர்ணயித்ததை விட குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறதே?' என, அவரிடம் கேள்வி எழுப்பினார்.இதற்கு அமைச்சர், 'அது மக்கள் நல்வாழ்வுத் துறை துறை சார்ந்த பிரச்னை. அதற்கு வேற அமைச்சர் இருக்கார்... என் துறையில் சிமென்ட், செங்கல், கல், ஜல்லி, கம்பி பத்தி கேட்டீங்கன்னா பதில் சொல்வேன். நான் எங்க போனாலும் கட்டடம் உறுதியாக இருக்கா என்ற, டெஸ்ட் ரிப்போர்ட் தான் பார்ப்பேன். கட்டுமானத்தில், 40 ஆண்டு அனுபவம் உள்ளதால், எளிதில் கண்டுபிடித்து விடுவேன்' என, பதிலளித்தார்.மூத்த நிருபர் ஒருவர், 'அடுத்தவங்க துறையில் மூக்கை நுழைத்து வம்பில் சிக்க வேண்டாம் என்பதில், அமைச்சர் உஷாரா தான் இருக்கார்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை