உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / உருப்படியா எதுவும் செய்யலையே!

உருப்படியா எதுவும் செய்யலையே!

திருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து, அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலரான நடிகை விந்தியா பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், 'சட்டசபை தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளை கொடுத்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. தி.மு.க., - எம்.பி.,க்கள் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. லோக்சபா கூட்டத்தை புறக்கணித்தது தான் மிச்சம்.'தற்போது தி.மு.க., வெற்றி பெற்றால், ஒன்று காங்கிரஸ் கட்சிக்கு கூஜா துாக்குவர் அல்லது மோடிக்கு ஜால்ரா தட்டுவர். அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், மக்கள் பயன்பெறும் திட்டங்களை கொண்டு வருவர்' என்றார்.இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'கடந்த 10 வருஷமா இவங்க கட்சி தலைவர்களும், எம்.பி.,க்களும் கூஜா துாக்குறது, ஜால்ரா தட்டுறதுன்னு தானே இருந்தாங்க... உருப்படியா எதுவும் செய்யலையே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை