உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பழைய கூட்டணி பாசம்!

பழைய கூட்டணி பாசம்!

நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து, அன்னுாரில் நடந்த பிரசார கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், 'தி.மு.க., ஆட்சியில் மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை, கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கப்படுகிறது. தி.மு.க.,வினரே கஞ்சா விற்கின்றனர். பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லுாரிக்கு அனுப்ப பயப்படுகின்றனர்.'காவல் துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. மூன்றாண்டு ஆட்சியால், தி.மு.க., அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும், செயின் பறிப்பு, கொலை, கொள்ளை நடக்கிறது' என்றார்.வாக்காளர் ஒருவர், 'மாநில அரசை இந்த போடு போடுறாரே... பா.ஜ., பற்றி வாய் திறக்கிறாரா... பழைய கூட்டணி பாசம் போல...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 21, 2024 10:44

'அதிமுகவில் இருந்தால் 'வருமானம் ' குறைவதுடன் வருஷ சேமிப்பும் கரைந்துவிடும் நாளைக்கே பாஜ பக்கம் போக நேரிட்டாலும் எதற்காக வாயை விட வேண்டும் ' என்ற முன்னெச்சரிக்கை தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை