உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இது மாதிரி தான் அதுவும்!

இது மாதிரி தான் அதுவும்!

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி, தன் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'மத்திய அமைச்சரவையில் கடந்த முறை யார், யார் என்னென்ன பொறுப்பு வகித்தனரோ, அதே துறையை தற்போது மீண்டும் அவர்களுக்கே வழங்கி உள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது; வருத்தத்துக்குரியது. கடந்த முறை அந்த பொறுப்பில் இருந்தவர்கள் சரியாக செயல்படவில்லை என்பது தான் எங்கள் வாதம். மீண்டும் அவர்களுக்கே அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது' என்றார்.இதை கேட்ட குசும்புக்கார வாக்காளர் ஒருவர், 'இவர் கூட தான் கடந்த முறை எம்.பி.,யா இருந்து தொகுதிக்கு ஒண்ணும் செய்யல... நாமெல்லாம் மறுபடியும் ஓட்டு போட்டு இவரை தேர்ந்தெடுக்கலையா... இது மாதிரி தான் அதுவும்...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 19, 2024 06:32

சாதனைக்காக ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்று எப்போதுதான் நடந்திருக்கிறது? இவர் அப்பா கூட 'நிதியை ' விட்டு நகர்ந்தாரா ?


முக்கிய வீடியோ