உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இதெல்லாம் என்ன நியாயம்?

இதெல்லாம் என்ன நியாயம்?

திருப்பூரில் நடந்த, புதிய பஸ்கள் துவக்க விழாவில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்றனர். பஸ்களுக்கு பச்சை கொடி காட்ட, மேடையில் இருந்து அமைச்சர்கள் நடந்து சென்ற போது, கட்சியினர் திரண்டு, அமைச்சர்கள் அருகில் வந்தனர்.போட்டோ, வீடியோகிராபர்கள், 'சார், இங்க திரும்புங்க; இப்படி பாருங்க; கொஞ்சம் தள்ளுங்க' என, சொல்லிக் கொண்டிருக்க, நெரிசலால் அசவுகரியமான சூழல் ஏற்பட்டது.இதை கவனித்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ், 'சொன்னா தள்ளி நில்லுங்களேன்பா' என்றார், கட்சியினரை பார்த்து. கட்சியினர் நகராமல் நிற்கவே, கோபமான அவர், 'ஏம்பா, சொன்னா கேட்கவே மாட்டேங்கிறீங்க... புது பஸ் பேப்பர்ல வரணும்லோ... மத்தவுங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி நின்னா எப்படி...' என்றார்.கட்சி நிர்வாகி ஒருவர், 'இவங்க வசதிக்கு வேணும்னா கூட்டத்தை கூட்டுறாங்க; வேணாம்னா தள்ளி போக சொல்றாங்க; இதெல்லாம் என்ன நியாயம்...' என, புலம்பியபடி புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூலை 29, 2024 16:58

அமைச்சர்களின் முகங்கள் மட்டும்தான் தெரிய வேண்டும் என்பது விளம்பர மாடலின் motto ஆயிற்றே மற்றவர்கள் வந்தால் பொறுப்பார்களா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை