உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / யாரை கவிழ்த்து விட போகுதோ?

யாரை கவிழ்த்து விட போகுதோ?

நீலகிரி லோக்சபா தொகுதியில், 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 'நோட்டா'வுடன் சேர்ந்து, 17 சின்னங்கள் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியிருந்தது. ஒரு இயந்திரத்தில் அதிகபட்சமாக, 16 வரிசை மட்டுமே இடம் பெற முடியும் என்பதால், நோட்டாவுக்கு தனியாக ஒரு இயந்திரம் வைத்தனர். வேட்பாளர்களுக்கு ஒரு இயந்திரமும், நோட்டாவுக்கான ஒரு இயந்திரமும் அருகருகே வைக்கப்பட்டன.நோட்டா சின்னம், இரண்டாவது இயந்திரத்தின் முதல் வரிசையில் இடம் பெற்றதால், விபரம் அறியாத பலரும், நோட்டாவுக்கு ஓட்டளித்தனர். ஓட்டுச்சாவடி அலுவலர் ஒருவர், 'பா.ஜ., வேட்பாளர் முருகன் பெயரில், சுயேச்சை வேட்பாளரை திராவிட கட்சிகள் தான் களம் இறக்கியிருக்கும்... அவர் போட்டியிடாமல் இருந்திருந்தால், ஒரு இயந்திரத்துடன் வேலை முடிந்திருக்கும்... இப்ப, நோட்டா வாங்குற ஓட்டு, யாரை கவிழ்த்து விடப் போகுதோ...' என, முணுமுணுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஏப் 29, 2024 06:42

ஓபிஎஸ் சுக்கு போட்டி ஐந்து பேர் என்றால் முருகனுக்கு ஒருவர்கூட இல்லை என்றால் கட்சிக்கே கௌரவம் இருக்காதே எப்படியோ நோட்டா போக மீதியை எண்ணுவது சுலபமாகி விட்டது


J.V. Iyer
ஏப் 29, 2024 05:57

இந்த முறை திமுக, அதிமுக நோட்டாவுக்கும் கீழே வோட்டு வாங்கி சாதனை செய்வார்கள்


Rajinikanth
ஏப் 29, 2024 08:50

ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவை பிஜேபி அவ்வாறு ஆகாமல் இருக்க வேண்டிக்கொள்ளுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை