உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அவரிடமே கேட்கலாமே!

அவரிடமே கேட்கலாமே!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தமிழகத்தில் தி.மு.க.,விற்கு பிரதான போட்டியாளர் பா.ஜ., கூட்டணி தான். இந்த முறை காங்கிரஸ் பல மாநிலங்களில் பூஜ்யமாகும். தி.மு.க., கூட்டணிக்கு மாற்று பா.ஜ., என்பது இந்த தேர்தலில் ஓட்டு சதவீதத்தில் நிரூபிக்கப்படும். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கிடைக்கும். அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு செல்லும். இந்த இரண்டு கட்சிக்கும் மாற்று கட்சி பா.ஜ., தான்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகத்தில் பா.ஜ., வளர்வது, தி.மு.க.,வுக்கு பிரதான போட்டியாளரா மாறியிருப்பது எல்லாம் இருக்கட்டும்... கட்சியில் இவரோட வளர்ச்சி நாளுக்கு நாள் தேய்ஞ்சுட்டே வருதே ஏன்...?' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'அதை அவரிடமே கேட்கலாமே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Srinivasan Krishnamoorthi
ஏப் 25, 2024 15:25

RSS அடித்தளம் சொந்த புகழ்பற்றி கவலை கொள்ளாது


Govind
ஏப் 25, 2024 12:48

ராஜா அவர்கள் எந்த பதவிக்காகவும் யாரிடமும் கேட்பது இல்லை அவர் ஒரு RSS தொண்டர் மிக தைரியமாக பணி ஆற்றுபவர் ப்ராஹ்மணர் ஆக பிறந்து விட்டார்


mukundan
ஏப் 25, 2024 10:55

இவர் அதிகம் பேசாமல் இருந்தாலே அது பஜக விற்கு அவர் செய்யும் பேருதவி


Dharmavaan
ஏப் 25, 2024 07:11

ராஜா பதவிக்காக வேலை செய்யவில்லை


D.Ambujavalli
ஏப் 25, 2024 06:34

பாவம், அவரிடம் இப்படிக் கேட்க கூடாத கூடாத கேள்வியெல்லாம் கேட்கலாமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை