உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஐஸ் வச்சா தான், எம்.பி., சீட்!

ஐஸ் வச்சா தான், எம்.பி., சீட்!

சென்னை, அம்பத்துாரில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், 'மதுரை, 'எய்ம்ஸ்' மருத்துவமனை திட்டம், 2014ல் உருவாக்கப்பட்டது. பிரதமர் மோடி, 2019ல் அடிக்கல் நாட்டினார். அதில், ஒரு செங்கல்லை கூட காணவில்லை. அங்கிருந்த செங்கல்லை, உதயநிதி எடுத்து வந்து, கடந்த சட்டபை தேர்தலில், அவங்க அப்பாவை முதல்வராக்கினார். 'அதாவது பிரசாரத்திற்கு சென்ற இடங்களில், அந்த கல்லை காட்டியே, தி.மு.க., ஆட்சியை உருவாக்கினார். அதே போல, இண்டியா கூட்டணிக்கு, உதயநிதி மீண்டும் ஒரு ஆட்சியை உருவாக்குவார்' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'உதயநிதிக்கு இப்படி வண்டி, வண்டியா, 'ஐஸ்' வச்சா தான் இவருக்கு மீண்டும், எம்.பி., சீட் கிடைக்கும்...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 18, 2024 04:26

ஆகக்கூடி கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள்,நிர்வாகிகள், இவர் உள்பட, கையாலாகாதவர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்


சமீபத்திய செய்தி