உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ராஜாவுக்கு இது தெரியாதா?

ராஜாவுக்கு இது தெரியாதா?

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., குறித்து விமர்சித்த நீலகிரி தொகுதி தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், முன்னாள் சபாநாயகர் தனபால் பேசுகையில், 'ராஜாவுக்கு வரலாறு தெரியாது. தி.மு.க., பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., குறித்தும் தெரியாது. கடனில் தவித்த கருணாநிதி குடும்பத்துக்காக, எங்கள் தங்கம் படத்துக்கு, சம்பளமில்லாமல் எம்.ஜி.ஆர்., நடித்து கொடுத்ததும் தெரியாது. எந்த வரலாறும் தெரியாமல், எம்.பி., ராஜா கண்டபடி உளறிக் கொண்டிருக்கிறார்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'எம்.ஜி.ஆரை சீண்டினால்,பதிலுக்கு நம்மை சீண்டாமல், கருணாநிதியை அ.தி.மு.க.,வினர் சீண்டுவாங்க என்பது கூட ராஜாவுக்கு தெரியாதா...?' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 24, 2024 06:41

இதுதான் 'குட்டி குறைத்து தாய் தலையில் விடிந்தது' என்பது இவர் எம் ஜி ஆரை தோண்டப்போய், தலைவர் வரலாறெல்லாம் அலச ஆரம்பித்துவிட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை