உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவரை ஏமாத்துறது, ஈசி இல்ல!

இவரை ஏமாத்துறது, ஈசி இல்ல!

கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற சுகாதார துறை செயலர் ககன் தீப்சிங் பேடி, மருத்துவமனையின் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகள் அவரை, தாங்கள் ஏற்கனவே தயார்படுத்தி வைத்திருந்த வார்டுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். ஆனால், அதிகாரிகள் அழைத்த வார்டுகளுக்கு செல்லாமல், பிற வார்டுகளுக்கு சென்ற செயலர், நோயாளிகளுக்கு மோசமாக இருந்த அடிப்படை வசதிகளை கண்டு, அதிகாரிகளை கேள்விகளால் துளைத்தெடுத்தார்.ஒரு வார்டில் ஆய்வின் போது, 'மருத்துவமனையில் சாப்பாடு கொடுத்தாங்களா?' என, நோயாளி ஒருவரிடம் செயலர் கேட்க, 'நான் காலையில் இருந்து சாப்பிடவில்லை. யாரும் சாப்பாடு கொடுக்கவில்லை' என, அந்த நபர் போட்டுக் கொடுத்தார்.'இவருக்கு ஏன் சாப்பாடு கொடுக்கவில்லை' என, அதிகாரிகளிடம் செயலர் கேட்க, அவர்கள், 'திருதிரு'வென முழித்தனர். டாக்டர்கள் சிலர், 'இவரை ஏமாத்துறது அவ்வளவு ஈசி இல்ல...' என, தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டே நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை