உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  காத்திருப்பது போல பேசுறாரே!

 காத்திருப்பது போல பேசுறாரே!

புதுச்சேரியில் செயல்படும், லட்சிய ஜனநாயக கட்சியின் தமிழக பொதுச் செயலரான நெல்லை ஜீவா, கிருஷ்ணகிரியில் சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், 'மேகதாது அணை குறித்து, புதிய ஆட்சியாளர்கள் வாய் திறக்காமல் உள்ளனர். சமீபத்தில், அப்பகுதியில் கால்நடைகளை தேடி சென்ற, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மூன்று பேரை கர்நாடக வனத்துறையினர் சுட்டு கொன்றுள்ளனர். இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். 'எங்களது கட்சி, தமிழக உள்ளாட்சி தேர்தலில் களம் காணும் நோக்கில் பயணிக்கிறது. த.வெ.க.,வுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்ற தவறான தகவல் பரவி வருகிறது. கூட்டணி குறித்த முழு நிலைப்பாட்டையும், எங்கள் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பார்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'என்னமோ, இவங்க கூட்டணிக்கு த.வெ.க., காத்துட்டு இருப்பது மாதிரி பேசுறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !