உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஒண்ணும் மாற போறதில்ல!

ஒண்ணும் மாற போறதில்ல!

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட அரசு துறை அதிகாரிகள், மனு வாங்க காத்திருந்தனர். முதியோர் உதவித் தொகை, மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாறுதல் உள்ளிட்ட கோரிக்கையுடன் மக்கள் மனு அளித்தனர்.மனு அளித்த முதியவர் ஒருவர், 'இதே மாதிரி தான், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அம்மா திட்டம் என்ற பெயரில் மனு வாங்கினர்; ஆனால், எதுவும் நடக்கல. தி.மு.க.,வினர், 'அம்மா திட்டம்... சும்மா திட்டம்...' என, கிண்டலடித்தனர். இப்ப இவங்க வாங்குற மனுவுக்காவது தீர்வு கிடைக்குமா...' என, அருகில் இருந்தவரிடம் அப்பாவியாய் கேட்டார்.இதற்கு அவர், 'மனு வாங்குறது அவங்களுக்கு வாடிக்கை... மனு கொடுக்கிறது நமக்கு வாடிக்கை... ஒண்ணும் மாற போறதில்ல...' என, முணுமுணுத்தவாறு வரிசையில் நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ