உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தமிழகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஏதாவது கோளாறு என்றால், அதை உடனே விரைந்து சரி செய்ய வேண்டும். அங்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.ஏதாச்சும், 'கோல்மால்' பண்ணாலும் கூட இழுபறியா இருக்கிற தொகுதிகளில் தானே செய்வாங்க... த.மா.கா., நிற்கும் தொகுதிகளில் இதுக்கெல்லாம் மெனக்கெடுவாங்களா என்ன? ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை அறிக்கை: தமிழகத்தில் கோடை வெயிலில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்க, உதவும் வகையில் ம.தி.மு.க.,வினர் நீர் மோர் பந்தல்களை அமைக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நீர் மோர் பந்தல் அமைக்க, அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற்று, மக்களின் தாகம் தீர்க்கும் கடமையை ஆற்ற வேண்டும்.சும்மாவே ம.தி.மு.க., தண்ணீர் பந்தலை பார்க்க முடியாது... இதுல அனுமதி எல்லாம் வாங்கி அமைப்பாங்களா என்ன?புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: தென் தமிழகத்தில் நிலவும் வேலை வாய்ப்பின்மையால்உயிரை பணயம் வைத்து, மக்கள் கல் குவாரி வேலைக்கு செல்கின்றனர். அவர்களின் உயிர்களை துச்சமாக மதித்து, எதை பற்றியும் கவலைப்படாமல் குவாரிகள் இயங்குவதால் தொடர் உயிரிழப்பு ஏற்படுகிறது. சட்டத்திற்கு புறம்பான அனைத்து கல் குவாரிகளும் விரைந்து மூடப்படா விட்டால், தமிழகம் முழுதும் இதற்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து புரட்சியில் ஈடுபடக்கூடிய காலம் விரைவில் உருவாகும்.அதெல்லாம் சரி தான்... சட்டவிரோத கல்குவாரிகளை மூடா விட்டால் புதிய தமிழகம் போராட்டம் நடத்தும்னு சொல்லாதது ஏன்?அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: மத்திய கூட்டணி ஆட்சியில், தி.மு.க., அங்கம் வகித்த போது, 1997ம் ஆண்டு அமலுக்கு வந்த, 'பிரச்சார் பாரதி' சட்டத்தின் படி தான், 'ஆல் இண்டியா ரேடியோ'வுக்கு, 'ஆகாஷ்வாணி' என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் அதை எதிர்க்காமல், தி.மு.க.,வும், அதன் தலைவரும், இப்போது 'பொதிகைக்கு பதில் ஆகாஷ்வாணி' என்ற பெயரால் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாக புலம்புவதால் என்ன பயன்?ஆங்கில பெயரை சமஸ்கிருதமா மாற்றுவதற்கும், தமிழ் பெயரை சமஸ்கிருதமா மாற்றுவதற்கும் வித்தியாசம் இல்லையா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ