உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களை, துறை அமைச்சர் அழைத்து பேச்சு நடத்தி இருக்க வேண்டும். 2017ல் இதேபோன்ற ஒரு நிலை வந்த போது, அப்போதைய முதல்வர், போக்குவரத்து தொழிலாளர்களை எச்சரித்தார். அதை கண்டித்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், முதல்வரான பின், முந்தைய முதல்வர் பின்பற்றிய அதே பாணியை பின்பற்றுகிறார். முந்தைய முதல்வரும், தற்போதைய முதல்வரும், தொழிலாளர் விரோத போக்கில், ஒரே கொள்கையை கொண்டிருப்பது தெளிவாகிறது.ஆளுங்கட்சியையும், பிரதான எதிர்க்கட்சியையும் ஒரு சேர திட்டுற ஒரே அரசியல் தலைவர் இப்போதைக்கு இவர் மட்டும் தான்! தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், டாடா, ரிலையன்ஸ், ஜிண்டால், டி.வி.எஸ்., கோத்ரேஜ் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்வதாக, முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்திய நிறுவனங்கள் தமிழகத்திற்கு அதிக முதலீட்டை கொடுத்திருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி துணை போகிறார் எனக் கூறி, கொச்சைப்படுத்தி பேசிய தி.மு.க.,வினர், இனியாவது பேசுவதை நிறுத்துவரா?இப்ப என்ன சொல்ல வர்றாரு... 'மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகிறார்; முதலீடு கிடைத்ததால் அதைப் பற்றி பேசக் கூடாது'ன்னு சொல்றாரா?இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி இருக்கிறது. மத்திய அரசு, தமிழகத்திற்கு உரிய நிதியை கொடுக்க மறுக்கிறது. வஞ்சம், பழி தீர்க்கிறது என்றே கூற வேண்டும். தமிழகத்தில் மழை, வெள்ளம் உள்ளிட்டவற்றால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிவாரண பணிகளுக்காக, ஒரு பைசாவை கூட மத்திய அரசு வழங்கவில்லை.தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருக்குன்னு இவரே சொல்றாரு... அப்புறம், தங்கள் கட்சி போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினரை சலுகைகள் கேட்டு போராட அனுமதிப்பது ஏன்?மத்திய உள்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் பேச்சு: பிரதமர் மோடி முயற்சியால், உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தை அடைந்துள்ளோம். வரும், 2047ல் உலக அளவில் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறி இருப்போம். அதற்கான முயற்சிகளில் பிரதமர் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு குடிமகனின் ஆசையும் அது தான்... அதை எப்படியாவது தடுக்கணும்னு தானே, 28 கட்சி கூட்டணி அமைக்கிறாங்க! 2024ல் மீண்டும் மோடி தான் பிரதமர்; அவரால் மட்டுமே நாட்டை வல்லரசாக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி