/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி ;ஊராட்சி அலுவலக கட்டடம் பூங்குணத்தில் அமைக்கப்படுமா?
செங்கல்பட்டு: புகார் பெட்டி ;ஊராட்சி அலுவலக கட்டடம் பூங்குணத்தில் அமைக்கப்படுமா?
சித்தாமூர் அடுத்த பூங்குணம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.குளக்கரை எதிரே, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில், ஊராட்சி மன்றம் செயல்பட்டு வந்தது.நாளடைவில் பராமரிப்பின்றி கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததால், முன்னெச்சரிக்கையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராம சேவை மைய கட்டடத்திற்கு, ஊராட்சி மன்றம் மாற்றப்பட்டு, தற்போது செயல்படுகிறது.கிராம சேவை மையத்தில் கிராம சபை கூட்டம், மன்ற கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தவும், சேவைக்காக வரும் பொதுமக்கள் அமரவும் போதிய இடவசதி இல்லாமல், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.பூங்குணம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கதிர்வேல்,பூங்குணம்.