உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கட்சி கொடி கம்பங்களின் கான்கிரீட் கழிவு அகற்றப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; கட்சி கொடி கம்பங்களின் கான்கிரீட் கழிவு அகற்றப்படுமா?

கட்சி கொடி கம்பங்களின் கான்கிரீட் கழிவு அகற்றப்படுமா?

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியான எண்ணெய்கார தெருவில் சினிமா தியேட்டர், திருமண மண்டபம், பல்வேறு வியாபார நிறுவனங்கள் கடைகள் அமைந்துள்ளன. இச்சாலையில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம். இச்சாலையோரம் இருந்த தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி கொடி கம்பங்கள் கடந்த மாதம் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டன. ஆனால், கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்த பீடம் மற்றும் இடிக்கப்பட்ட கல்வெட்டின் கான்கிரீட் கழிவுகள் அகற்றப்படவில்லை. வாகன போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் கான்கிரீட் கழிவுகள் இடையூறாக உள்ளன. எனவே, எண்ணெய்கார தெருவில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கான்கிரீட் கழிவுகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - என்.தினகரன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !