| ADDED : ஜூலை 18, 2024 01:17 AM
7 ஆண்டுகளாக பராமரிக்காததால் மண் சாலையாக மாறிய அவலம்
திருத்தணி ஒன்றியம் மேதினாபுரம் கிராமத்தில் இருந்து, சந்திரஞ்ஜெயபுரம் ஊராட்சிக்கு செல்லும் தார்ச்சாலை, ஏழு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.இச்சாலையை முறையாக பராமரிக்காததால், சாலை முழுதும் சேதமடைந்துள்ளன. இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர்கள், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்டவை செல்கின்றன.சேதமடைந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ்.பழனி., சத்திரஞ்ஜெயராம்