உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / இன்ஜி., கல்லுாரிகளில் அண்ணா பல்கலை கள ஆய்வு செய்ய முடிவு

இன்ஜி., கல்லுாரிகளில் அண்ணா பல்கலை கள ஆய்வு செய்ய முடிவு

சென்னை:அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அங்கீகாரம் மற்றும் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கு, கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பல்வேறு வகை சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற, 295க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், பிற கல்லுாரி பேராசிரியர்களை, தங்கள் கல்லுாரியில் பணியாற்றுவதுபோல் போலி ஆவணங்கள் வழங்கியிருந்தன. இந்த மோசடி குறித்து உரிய பதில் அளிக்குமாறு, கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.மேலும், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் உள்கட்டமைப்பை நேரடியாக ஆய்வு செய்ய, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் முன், இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை