வகுப்பறையில் மோதல் மாணவன் பலி
எருமப்பட்டி:நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே நவலடிப்பட்டியை சேர்ந்த ஆகாஷ், 16, வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ௧ படித்தார். இவருக்கும், மற்றொரு மாணவனுக்கும் வகுப்பறையில் நேற்று மாலை தகராறு ஏற்பட்டது. இருவரும் வகுப்பறையில் தாக்கி கொண்டதில், ஆகாஷ் மயங்கினார்.பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷை மீட்டு, எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்ற நிலையில், ஆகாஷ் இறந்தது தெரிந்தது.ஆகாஷை தாக்கிய மாணவனை பிடித்து, எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.