உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / காகித டிக்கெட் பயன்பாடு குறைக்க மெட்ரோ நடவடிக்கை

காகித டிக்கெட் பயன்பாடு குறைக்க மெட்ரோ நடவடிக்கை

சென்னைசென்னையில் மெட்ரோ ரயில் சேவையை, தினமும் 2.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் காகித டிக்கெட், பயண அட்டை, க்யூ.ஆர்., தொழில்நுட்ப வசதியாக டிக்கெட் பெறும் வசதி இருக்கிறது. சமீபத்தில் வாட்ஸாப் செயலி, பயண அட்டை, தேசிய பொது இயக்க அட்டை, பேடிஎம் செயலி வாயிலாகவும் டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.இருப்பினும், 20 சதவீத பயணியர் தினமும் காகித டிக்கெட்டை எடுத்து பயணம் செய்து வருகின்றனர். எனவே, காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:அறுபது சதவீத பயணியர் அட்டை வாயிலாகவும், 20 சதவீதத்தினர் கியூ.ஆர்., தொழில்நுட்ப வாயிலாக டிக்கெட் எடுத்து பயணிக்கின்றனர். 20 சதவீத பயணியர் காகித பயணச்சீட்டு எடுத்து பயணிக்கின்றனர். எனவே, காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிக்கெட் கவுண்டர்களில் பயணியரின் வாட்ஸாப் செயலி வாயிலாக, டிஜிட்டல் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறோம்.'காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிக்கெட் கவுன்டர்களில் பயணியரின் வாட்ஸாப் செயலி வாயிலாக டிஜிட்டல் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறோம். இதை கொண்டு, நுழைவாயிலில் மொபைல் போனில் ஸ்கேன் செய்து, பயணம் செய்யலாம். தற்போது, விமான நிலையம், கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் இந்த புதிய முறையை துவங்கி உள்ளோம். அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த வசதி விரிவுப்படுத்தப்படும். வாட்ஸாப் வசதி இல்லாதவர்களுக்கு மட்டுமே காகித டிக்கெட் வழங்குகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை