உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ரேஷன் கடை அமைக்க கோரி சாலை மறியல்

ரேஷன் கடை அமைக்க கோரி சாலை மறியல்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட, கூப்புளிக்காடு 16வது வார்டு பகுதியில், 204க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் பொருட்கள் வாங்க, 1 கி.மீ., துாரத்தில் உள்ள ஆதனுாரில் உள்ள ரேஷன் கடைக்கு, பொதுமக்கள் செல்ல வேண்டி உள்ளது. இதனால், கூப்புளிக்காடு பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர, அப்பகுதியினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை என்பதால், வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி, பொதுமக்கள் நேற்று நீண்ட நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம் மற்றும் போலீசார், பொதுமக்களுடன் பேசி, விரைவில் பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.இதனால், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி