உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பறவைகள் கொன்று குவிப்பு வழக்கு பதியாத வனத்துறை

பறவைகள் கொன்று குவிப்பு வழக்கு பதியாத வனத்துறை

புதுச்சேரி:புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.,யில் ஊசுட்டேரி உள்ளது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களால் பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஏரியில், கடந்த 10ம் தேதி வனவிலங்குகள், பறவைகள் கொத்துத் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டன. வழக்கமாக, ஒரு சில கொக்குகளை கொன்றால் கூட, வழக்கு பதிவு செய்து, 'போஸ்' கொடுக்கும் புதுச்சேரி வனத்துறை, இவ்விஷயத்தில் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் மவுனமாக உள்ளது.இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:ஊசுட்டேரி ஒன்றும் சாதாரணமான இடம் அல்ல. பறவை சரணாலயம். அங்கு அடைக்கலமான பறவைகள், விலங்குகளை கொன்றுள்ளனர். அதை, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரிப்பதில் வனத்துறைக்கு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக இவ்விஷயத்தை மூடி மறைக்க முயல்வதாக தெரிகிறது. எனவே இப்பிரச்னையில் கவர்னர் மற்றும் தலைமை செயலர் நேரடியாக தலையிட வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை