உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / மோகன் சி லாசரஸ் குறித்து வீடியோ வெளியிட்டவர் கைது

மோகன் சி லாசரஸ் குறித்து வீடியோ வெளியிட்டவர் கைது

துாத்துக்குடி:மதபோதகர் மோகன் சி லாசரஸ் குறித்து யூ டியூபில் வீடியோ வெளியிட்ட சார்லஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே நாலுமாவடியில் மதபோதகர் மோகன் சி லாசரஸ் 'இயேசு விடுவிக்கிறார்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இடையன்குடியை சேர்ந்த சார்லஸ் 42, என்பவர் தற்போது சென்னை நெசப்பாக்கம் பாரதிநகரில் வசித்து வருகிறார். அவர் தமது யூடியூப் சேனலில் மோகன் சி.லாசரஸ் குறித்து வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். இது குறித்து மோகன் சி.லாசரஸ் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. குரும்பூர் போலீசார் சார்லசை கைது செய்து துாத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி