உள்ளூர் செய்திகள்

நாளிதழ் இல்லாத நாடு!

ஆசியாவின் தெற்கு பகுதியில் உயரமான இடத்தில் உள்ளது திபெத் நாடு. கடல் மட்டத்திலிருந்து, 4805 மீட்டர் உயரத்தில் உள்ளது; இங்கு, சீனர்கள் அதிகம் வசிக்கின்றனர்; பிரதானமாக புத்த மதம் பின்பற்றப்படுகிறது; தலைவரை தலாய் லாமா என்பர்.உயரமான இடத்தில் இருப்பதால் குளிர் அதிகம். ஆண், பெண் உடுத்தும், உடையில் வித்தியாசம் காண முடியாது. பார்லியை வறுத்து, மாவாக்கி, வெண்ணை அல்லது பால் ஊற்றி, பசைப்போல் கிளறிச் சாப்பிடுவதே முக்கிய உணவு. மடாதிபதிகள், செல்வந்தர்களின் பிணங்களை மட்டுமே புதைக்கின்றனர்; சாதராண மக்கள் பிணங்களை, துண்டுகளாக்கி கழுகுகளுக்கு இரையாக்குகின்றனர்.புகைப் பிடிப்பது, திபெத்தில் சட்டப்படி குற்றமாகும். இங்கு, செய்தி தாளோ, பத்திரிகையோ கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !