உள்ளூர் செய்திகள்

பறக்க இயலாத பறவை!

பறவையினத்தில் பறக்க இயலாதது, பெரிய புள்ளி கிரேட் ஸ்பாட்டட் கிவி. ஆஸ்திரேலியா கண்டம் நியூசிலாந்தின் தெற்கு பகுதி தீவின் மலை பகுதிகளில் காணப்படுகிறது. இதை ரோரோரா, பெரிய சாம்பல் கிவி என்றும் அழைப்பர். இதன் விலங்கியல் பெயர், ஆப்டெரிக்ஸ் ஹேஸ்டி.இது...* இரவில் மட்டும் இரை தேடும்* முக்கிய உணவு மண்புழு, கம்பளி பூச்சி, நத்தை, வண்டு மற்றும் சில்வண்டு* உதிர்ந்து கிடக்கும் பழம், இலைகளையும் உண்ணும்.பொதுவாக, பறவைகளுக்கு, வாசனையை உணரும் திறன் மிக குறைவு. ஆனால், இந்த பறவை வாசனையை உணரும். மூக்கின் நுனியில் நாசித்துவாரங்கள் பெற்றுள்ள ஒரே பறவை இனம் இது. இதன் முட்டை எடை மிக அதிகம். ஒரு கிலோ எடையுள்ள பறவையின் முட்டை, 250 கிராம் எடை வரை இருக்கும். இவ்வளவு பெரிய முட்டை இட அதிகம் சக்தி தேவை. இதனால், ஆண்டிற்கு ஒரே முட்டை மட்டுமே இடும். அதை, 85 நாட்கள் அடை காக்கும். முட்டையிலிருந்து, குஞ்சு வெளியேற மூன்று நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும்.ஐரோப்பியர் வருகைக்கு முன், நியூசிலாந்தில், 1.2 கோடி பறவைகள் இருந்தன. தற்போது, 15 ஆயிரம் தான் உள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது.ஐரோப்பியர் கொண்டு வந்த வேட்டை நாய்களிடம் இருந்து தப்ப முடியாமல் இந்த பறவை இனம் அழிந்தது. வேட்டை மற்றும் காடு அழிப்பு நடவடிக்கையாலும், இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை, அழியும் வாய்ப்புள்ள இனமாக, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது. பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.- வானதி பைசல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !