உள்ளூர் செய்திகள்

உதவும் விதை!

புதுச்சேரி, ஆட்டுப்பட்டி, புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில், 2016ல், 9ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு! சமூக அறிவியல் பாட ஆசிரியை நோயலா மிகவும் கண்டிப்பானவர்; புரியும் வண்ணம், எளிமையாக பாடம் நடத்துவார். இவரது பாட வேளையில் மட்டும், மாணவர்கள் அடங்கி, அமைதியாக கவனிப்பர்.ஒரு நாள் இறைவணக்க கூட்டத்தில், 'ஆதரவற்றோருக்கு பழைய துணிகளை கொடுத்து உதவுங்கள்...' என, அறிவித்தார் தலைமையாசிரியர்.என் உடைகளுடன் உறவினர் மற்றும் நண்பர்களிடமும் சேகரித்து, மறுநாள் எடுத்துச் சென்றேன். அன்று என் வகுப்பில் யாரும், ஒரு துண்டு துணி கூட எடுத்து வரவில்லை.இதைக் கண்ட ஆசிரியை, 'உதவுற மனம் உள்ளவன்...' என பாராட்டி என்னை கவுரவித்தார். உண்மையிலே உதவுவதை அவரிடம் இருந்தே கற்றேன். ஏழைக் குடும்பத்தை சேர்ந்த என் படிப்பு ஆர்வம் கண்டு, கல்வி கட்டணத்தை செலுத்தி உதவியிருந்தார். இப்போது என் வயது, 18; உதவும் எண்ணத்தை விதைத்த ஆசிரியையை போற்றி வாழ்கிறேன்.- அ.தயசீலன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !