அசத்தும் ஆம்பர்!
கடலில் ஸ்பெர்ம் திமிங்கலம் என ஒருவகை திமிங்கலம் உள்ளது. இது நோய் வாய்ப்பட்டிருக்கும் போது, இதன் உடலிலிருந்து மெழுகு போன்ற ஒரு பொருள் வெளியாகிறது. இது நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக இறுகி பல ஆண்டுகளுக்குப் பின் கெட்டிப் பொருளாக மாறுகிறது.இதனைக் தான் 'ஆம்பர்' என்று கூறுவர். இந்த ஆம்பரின் விலை தங்கத்தின் விலையை விட அதிகம். இது அபூர்வமாய்க் கிடைப்பதால் டிமாண்டும் அதிகம். சில நாடுகளில் இதனைக் காதலைத் தூண்டும் ஒரு மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆம்பர் மெழுகின் ஒரு துளியை ஆல்கஹாலோடு கலந்து அதனை பூவின் சத்தோடு கலந்தால், பூவின் மணம் அழியாமல் நீண்ட நாள் நீடிக்கிறது.இந்த ஆம்பர் கெட்டியானாலும் கடலில் மிதக்கிறது. சில நேரங்களில் கரைகளில் ஒதுங்கி இருக்கும். டொமினிகன் ரிபப்ளிக் பகுதிகளில் இந்த ஆம்பர் கிடைக்கும்.