ஆஹா! ஐஸ் டீ!
செயிண்ட் லூயிஸ் 1904ம் ஆண்டு உலகக் கண்காட்சியில் 'ரிச்சர்டு பிளெக்னெய்டன்' என்பவர் இந்தியத் தேனீரை அறிமுகம் செய்வதற்காக ஓர் அரங்கு அமைத்திருந்தார். சூடாகவும், சுவையாகவும் தயாரிக்கப்பட்டிருந்த அதை ஒரு பொருட்டாக கருதி குடிக்க ஒருவரும் முன்வரவில்லை.கண்காட்சியைச் சுற்றி வந்த ரிச்சர்டு அங்கே ஐஸ் போடப்பட்ட பானங்கள் எல்லாம் வியாபாரத்தில் சக்கை போடு போட்டதைக் கண்டார். தனது அரங்கில் 'ஐஸ் டீ' கிடைக்கும் என்று அறிவித்து டீயில் ஐஸ் போட்டு விற்றார். நல்ல வியாபாரம், நல்ல இலாபம், கூடவே உலகின் முதன் முதலில், 'ஐஸ் டீ' அறிமுகம் செய்தவர் என்ற புகழையும் பெற்றார்.மூளையை யூஸ் பண்ணுங்க குட்டீஸ்... பளீச் ஐடியாஸ் கிடைக்கும்.