உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மூளைக்கு காபி!டீயை உழைப்பவர் பானமாக சொல்வர். காரணம், அது உழைக்க உற்சாகப்படுத்தும். காபியை சிந்தனையாளர் பானமாக சொல்வர். காரணம், அது சிந்திக்க உற்சாகப்படுத்தும். எதுவும் அளவுக்கு மிஞ்சக் கூடாது என்பர். காபியை பற்றி அறிவோம்...காபி செடி விதைகள் என்று அழைக்கப்படும் 'காபி பீன்களை' வறுத்து அவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதுதான் உலகம் முழுவதும் அருந்தப்படும் சூடான காபி. இது முதன் முதலில் 9ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்டது. அன்று தொடங்கி இன்று வரை உலகெங்கும் அதிகம் பருகப்படும் பானமாகக் காபி கருதப்படுகிறது. 2004ம் ஆண்டு 12 நாடுகளில் அதிகம் ஏற்றுமதியாகும் வேளாண் பொருளாக காபி திகழ்ந்தது.2005ல் உலகளவில் அதிக மதிப்புள்ள வேளாண் ஏற்றுமதிப் பொருளாகவும் இது விளங்குகிறது. காபி அருந்துவதையும், அதிலுள்ள மருத்துவ குணத்தையும் தொடர்பு படுத்தி பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காபி (ம) மனதின் செயல்பாடு, காபி (ம) வேலை பார்க்கும் இடம், காபி (ம) பார்கின்சன் நோய், காபி (ம) பாதுகாப்பான வாகன ஓட்டம், காபி (ம) சமூக சந்தோஷம், காபி (ம) புற்றுநோய், காபி (ம) நீர்மம் என பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்த விழிப்புணர்வு பெறுவதற்காக கீழ்கண்ட வற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.* மிதமான அளவு காபி அருந்துவோருக்கு இதய நோய், இரண்டாம் வகை நீரிழிவு, ஈரல் காயம், முதுமை மூட்டு அழற்சி, மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய் (ம) வேறு சில புற்று நோய்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு.* தூண்டி விடுதல், எண்ணத்தை மாற்றுதல், அடிமைப்படுத்துதல் ஆகிய குணங்கள் இருப்பதால் காபியை ஒரு சாரார் போதை மருந்துக்கு இணையாகவும் கூறுவர். ஆனால், அதிக அளவில் கட்டுப்பாடு இன்றி அருந்தினால், இது ஓரளவு உண்மைதான். ஆனால், ஊட்டச்சத்து நிபுணர்கள் சோடா (அ) சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்துவதற்குப் பதில் காபி குடிப்பது தவறில்லை என்றே வாதிடுகின்றனர்.* காபி அதிக அளவில் பருகினால், அதிகம் சிறுநீர் வெளியேறும். இதன் காரணமாக உடலில் உள்ள முக்கிய கனிமப் பொருட்களான மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் ஆகியவற்றை இழக்க நேரிடும்.உடலில் உள்ள வைட்டமின் பி1 சத்தும் கரையத் துவங்கும். ஆனால், காபி குடிக்காதவர்களை விட அதிக அளவில் காபி குடிப்பவர்களின் உடலில் 8 முதல் 14% கனிமப் பொருட்களும், வைட்டமின்களும் கூடுதலாக சேர்கின்றன என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தினசரி உட்கொள்ளும் உணவு (ம) மல்டி வைட்டமின்கள் மூலமாகவும் இழக்கும் கனிமப் பொருட்களையும் வைட்டமின்களையும் ஈடு செய்யலாம்.* மிதமான அளவு காபியுடன், ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் (ம) குரோமியம் சத்துக்கள் கொண்ட ஆரஞ்சு சேர்த்து பருகினால், வளர்சிதை வினை மாற்ற அளவு 30% அதிகரிக்கும்.* உடற்பயிற்சியுடன் 300 மி.லி., காபியும் அருந்தினால், 20% ஆற்றல் அதிகரிக்கும். தலை சுற்றல் குறையும். உடலிலுள்ள கொழுப்புச் சத்து 10.7% வேகமாகக் குறையும்.* காபியில் உள்ள கபைன் மூளையை விழிப்புடன் புதிய தகவல்களை உள்வாங்கும் திறனுடன் வைத்திருக்கும்.* இடைவெளி விட்டு காபி குடிப்பது அவ்வப்போது எடுக்கும் பசியைக் குறைக்க உதவும். சில சமயம் அதிகரிக்கும் வாய்ப்புள்ள ரத்த அழுத்தமும் இதன் மூலம் குறையலாம்.* தொடர்ந்து காபி குடிப்பதால், இரண்டாம் வகை நீரிழிவு நோய் உள்ளிட்ட ஏனைய சுகாதார இடர்கள் தாக்குவது குறையலாம்.காபி குடிப்பது பற்றிய சில மருத்துவர்களிடம் கேட்ட கேள்விகள் இவை.1. காபி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா?'இந்தக் கேள்விக்கு இன்னும் 100 சதவீதம் சரியான பதில் கிட்டவில்லை. ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் வரும் என்ற பீதி இன்றுவரை உள்ளது. ஆனால், கெட்டது இல்லை என்றே இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.2. ஒரு நாளைக்கு எவ்வளவு காபி சாப்பிடலாம்?ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் காபி வரை சாப்பிடலாம் என்கின்றனர்.3. தூங்கப் போகும் போது காபி சாப்பிடலாமா?வேண்டாம். ஒரு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும். மேலும், தூக்கம் குறைவாக உள்ளவர்கள் காபியைத் தவிர்ப்பது நல்லது.4. தலைவலி வரும்போது மாத்திரையுடன் காபி சாப்பிடுகிறார்களே இது சரியா?தவறு. தலைவலி மாத்திரையை காபியுடன் எடுத்துக் கொள்ளக் கூடாது. தண்ணீர்தான் அதற்கு உகந்தது. மாத்திரைகளின் வீரியத்தை காபி குறைக்கும்.5. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு காபி ஏற்றதா?காபி சாப்பிடுபவர்களுக்கு ஆரம்பகால சர்க்கரை வியாதி வராது என்கின்றனர். ஆனால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரை போடாமல் காபி சாப்பிட வேண்டும். செயற்கை சர்க்கரை (சுகர் பிரி)யை உபயோகிக்கவே கூடாது. பிளாக் காபி இவர்களுக்கு நல்லது.6. கர்ப்பிணிகள் காபி சாப்பிடலாமா?பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி சாப்பிடுவதுதான் நல்லது. பக்கவாதம், நீரிழிவு, கல்லீரல் புற்று நோய் போன்ற பாதிப்புகளில் இருந்து பெண்களை காபி காக்கும் என்கின்றனர். ஆனால், கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை தேவை.7. இதய நோய் உள்ளவர்கள் காபியை நிறுத்திவிட வேண்டும் என்கிறார்களே?அது நேற்றுவரை இருந்த கருத்து. ஒரு நாளைக்கு 3 கப் காபி குடித்தவர்களுக்கு மற்றவர்களை விட இதய பாதிப்பு 25 சதவீதம் குறைவாகவே உள்ளதாக இப்போது கண்டுபிடித்திருக்கின்றனர்.8. காபி குடித்தால் கேன்சர் வருமா?காபி குடித்தால் கல்லீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைவதாக அமெரிக்க நிபுணர்கள் கூறுகின்றனர். 9. குழந்தைகளுக்கு காபி தரலாமா?பாலின் அளவைக் கூட்டி, காபி பொடியின் அளவைக் குறைத்து காபி போட்டு குழந்தை களுக்குத் தரலாம். அது குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்படைய வைக்கிறதாம். இரவில் கண்விழித்துப் படிக்கும் மாணவர் களுக்கு காபி நல்லது. அது மாணவர்களை நன்றாக படிக்க வைக்க உதவுகிறது. காரணம் மூளையின் நினைவாற்றல் காபியினால் கூடுகிறது.10. காபி குடிப்பதினால் என்ன பயன்?இதயநோய், சுவாச நோய், சர்க்கரை நோய், காயங்கள், விபத்துக்கள், தொற்றுநோய், பக்க வாதம், எலும்புத் தேய்மானம் போன்ற நோய்களால் ஏற்படும் பாதிப்பை அதிகளவு காபி தடுக்கிறது. மனிதர்கள் நீண்ட நாள் வாழ காபி உதவுகிறது என்பதே இன்றைய ஆராய்ச்சி முடிவு.என்றென்றும் அன்புடன்,அங்குராசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !