அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சிவப்பும், நீலமுமாய் கலர் மாறும் செவ்வாய்!பூமியெங்கும் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது. இதனால் நீர் நிலைகளும், ஆறுகளும் வற்றி கொண்டு வருகின்றன. மழை யளவும் குறைந்து வறட்சி காணப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்கிரகத்தில் வெள்ளம் என்றால் நம்ப முடிகிறதா?நாம் வாழ்கிற பூமியில் இருந்து சுமார் 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் செவ்வாய் கிரகம் உள்ளது. பூமிக்கு அடுத்தபடியாக உயிரினங்கள் வாழ்வதற் கான அனைத்து சூழ்நிலை களும் உள்ள கிரகம் செவ்வாய்தான் என்பது விஞ்ஞானிகளின் முடிவு.இதைப்பற்றிய ஆய்வு களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்.அமெரிக்கா அனுப்பியுள்ள செயற்கை கோள்கள் செவ்வாய் கிரகம் பற்றிய புகைப் படங்களை அவ்வப்போது அனுப்பி கொண்டிருக்கிறது. சமீபத்தில், செயற்கைக் கோள் படங்கள் செவ்வாய் கிரகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை காட்டி யுள்ளது கடுமையான பனிப்பொழிவு.அதிகமாக பெய்த மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை அந்த படங்கள் தெரிவித்தன. இந்த வெள்ளப் பெருக்கு ஏற்படுத்திய பெரும் சேதங்களை யும் நீர் அரிப்பின் அளவு குறித்த தடயங்களையும் அந்த புகைப்படங்கள் காண்பிக் கின்றன.இந்த வெள்ளப்பெருக்கு 50 கோடி ஆண்டு களுக்கு முன்னால் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது நீரியல் துறையினருக்கு உற்சாகத்தை தந்துள்ளது.நீரியல் துறையில் மேற்கொள்ள வேண்டிய புதிய ஆய்வுகளுக்கும் இது அடித்தளமிட்டுள்ளது.செவ்வாய்கிரகத்தில் நீரோடைகளும், பூமியில் உள்ளது போல் கடல்களும் இருந்திருக்கும் என்ற எண்ணத்தை இந்த படங்கள் தோற்றுவிக்கின்றன.செவ்வாய் கிரகத்தில் காற்று மண்டலம் உள்ளதாக ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருக் கிறது என்ற ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. செவ்வாய் கிரகத்தின் புகைப் படங்களில் முக்கியமான ஒன்று அதன் நிறம் பற்றியது.கோடைகாலத்தில் சிவப்பாகவும், குளிர் காலத்தில் நீல மாகவும் செவ்வாய் கிரகம் காட்சி யளிக்கிறது. இதற்கு காரணம் செவ்வாயில் ஏற்படும் புழுதிப் புயல் தான் என்பது அந்த படங்கள் மூலம் தெரிய வந்துள்ளன.குண்டு காய் - குட் பாய்!காய்கறி வகைகளில் ஒன்றான பூசணியை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால், நரம்பு தொடர்பான நோய்கள், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப் புண் போன்றவை உள்ளவர்களுக்கு அவற்றின் தீவிரம் குறையும்.பூசணி, உடல் சூட்டை தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீக்கும். எப்போதும் உடல் வலி இருப்பவர்கள், பூசணிக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் உடல் வலி நீங்கும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, தினசரி பூசணி சேர்த்து சமைத்த உணவை கொடுத்தால், நல்ல பலன் கொடுக்கும்.மருத்துவத்தில் பூசணிக்காயின் சதைப் பகுதி நீர் விதை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைச்சுற்றலை நீக்கவும் பயன்படுகிறது.ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப் புழுக்கள் வெளியேறவும், சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளி யேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண் பூசணி பயன்படுகிறது.வெண் பூசணிக்காயின் சாறு 30 மில்லி அளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் இதயத்துக்கு பலம் கொடுக்கும். ரத்தம் சுத்தப்படும்.குறைந்த வார்த்தைகளில் நிறைந்த பொருள்!* வங்கியில் பிக்ஸட் டெபாசிட் செய்யும் போது அந்த விண்ணப்பத்தில், 'ஆட்டோ மெடிக் ரெனியூவல்' என்ற கட்டத்தை தேர்ந்தெடுக்கவும். நமக்கு தேதி மறந்தாலும், 'எப்டி' முடிந்ததும் மீண்டும் புதுக்கப்பட்டுவிடும்.* மாதத்தில் ஒரு நாள், மவுன விரதம் பழகலாம். இதனால் கோபம் ஏற்படாது, பொறுமை வளரும். முக்கியமாக மன அழுத்தம் குறையும்.* தயிர் வடை செய்யும் வடைகளை முதலில் பாலில் போட்டு எடுங்கள். பிறகு தயிரில் போடுங்கள். கூடுதல் சுவையாக இருக்கும்.*ரசத்தில் பெருங்காய வாசனை தூக்கலாக இருக்க வேண்டுமா? தாளிக்கும்போதோ , கொதிக்கும் போதோ பெருங்காயத்தை போடாமல், இறக்கிய பிறகு பெருங்காயத் தூள் தூவி, கலக்கி மூடவும். பரிமாறும் போது வாசனை ஊரைத்தூக்கும்.சருமத்திற்கும் செடிக்கும் நல்லது முட்டை*முட்டையில் இருக்கும் வெள்ளைக் கருவுடன் சில துளி எலுமிச்சை சாறைச் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இந்தக் கலவையைச் சுருக்கம் விழுந்துள்ள பகுதிகள் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி உலர விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். உங்கள் சருமம், சுருக்கங்கள் நீங்கி, பட்டுப் போல மிருதுவாகும்.* முட்டை வேக வைத்ததும் அந்த வெந்நீரைக் கீழே கொட்டாமல் நன்றாக ஆறியபின் செடிகளுக்கு ஊற்றவும். செடிகளின் வேர்களுக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும்; செடிகளும் செழித்து வளரும்.அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!இது, 'கார்ன் போண்டா' செய்முறை நேரம்.தேவையானவை: சோளமுத்துக்கள் , மைதா மாவு-தலா ஒரு கப், பால் -2 கப், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 4, துருவிய சீஸ், வெண்ணெய்- தலா 4 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி இலை- 2 டீஸ்பூன், பனீர்-200 கிராம், பிரெட் தூள்-அரை கப், உப்பு,< எண்ணெய்- தேவையான அளவு.செய்முறை: சோள முத்துக்களை வேக வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்து கொள்ளவும். பச்சை மிளகாய், பனீரை நறுக்கி வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருகியதும், மைதா மாவை கொட்டி ஒரு நிமிடம் வறுக்கவும்.மாவில் பாலை ஊற்றி கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். அதில் உருளைக் கிழங்கு, பனீர், சோளம், பச்சை மிளகாய், துருவிய சீஸ், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும். 4 டீஸ்பூன் மைதா மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து, உருண்டைகளை அதில் தோய்த்து பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.என்றும் அன்புடன், அங்குராசு***