உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மூழ்கியே கிடப்பவன்!கடல்-மூன்றெழுத்து பேரதிசயம். கடலே ஒரு அதிசயம், அப்புறம் அதிசயங்களின் வரிசை மணல், அலைகள், மீன்கள், கடல் உயிரினங்கள், தாவரங்கள்... அப்புறம் மனிதனின் கப்பல்கள். அதிலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நீர்மூழ்கி கப்பல்கள்! அதன் உள்ளே சென்று பார்ப்பதற்கு நமக்கு எளிதான வாய்ப்புகள் இல்லை. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் பயன் என்ன? அது எப்படி செயல்படுகிறது?கடலில் நடைபெறும் போர்களில் ஒற்றர்களை போல செயல்படுபவையே நீர்மூழ்கி கப்பல்கள். கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார். சில வருடங்களுக்கு முன்னால் சிறிய அளவில் செய்யப்பட்டன. தற்போது 400 அடி நீளம் வரை உள்ளன. நீர்மூழ்கிக் கப்பலில் 2 இன்ஜின்கள் உள்ளன. நீர் மட்டத்திற்கு மேலே ஒரு இன்ஜின் உள்ளது. இது கப்பல் செல்லும்போது நீராவியால் இயக்கப்படும். இன்னொன்று கப்பல் நீரில் மூழ்கி செல்லும் போது மின்சாரத்தால் இயக்கப்படும்.தற்போதுள்ள புதிய கப்பல்கள் 12 ஆயிரம் மைல் தூரம்வரை நிற்காமல் செல்லக் கூடியவை. 60 மணி நேரம் மின்சார ஆற்றலும் செயல்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வாங்க மேடை ஒன்று இருக்கும். மேலே பீரங்கி இருக்கும்.கடலின் உள்ளே செல்லும் போது பீரங்கியை உள்ளே இழுத்து கொள்ளும் வசதி உள்ளது. மேடையின் மீது ஒரு சிறிய கோபுரம் அமைந்திருக்கும்.கோபுர உச்சியில் பெரிஸ்கோப் (கஞுணூடிண்ஞிணிணீஞு) இரட்டை கண்ணாடி 2 அல்லது 3 பொருத்தப் பட்டிருக்கும். ஒன்று சரியாக செயல்படாவிட்டாலும் இன்னொன்று உதவும். இந்த கண்ணாடியில் நான்கு திசைகளிலும் திருப்பி பார்க்கும் வசதி உள்ளது. எனவே, நீரினுள் இருக்கும் போது கண்ணாடியின் உதவியால் மாலுமி மேலே நடைபெறும் செயல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். பெரிஸ்கோப் செயல்பட வில்லையெனில், கப்பலுக்கு வழி தெரியாது. எனவே, நீர்மூழ்கிக் கப்பலின் ஓரங்களில் வெடிகுண்டு வைக்கும் அறை இருக்கும். நீரினுள் மூழ்கும் முன்பு இதன் கதவுகளையும் அடைத்துவிடுவர்.கப்பலின் அடிப்புறம் 2 பலகைகளால் ஆனது. கடலின் உள்ளேயிருந்து வேகமாக மேலே வர கீழே இருக்கும் பலகையை தட்டிவிடுவர். முன்னும், பின்னும் சிறகுகள் அமைந்திருக்கும்.கப்பலின் உள்ளே இடம் நெருக்கமாக இருக்கும். உணவுப் பொருள்கள், போர்க்கருவி, நீராவிக் கருவி, மின்சாரக் கருவி போன்றன அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும்.மேலும், நீர்த்தொட்டிகளும் காற்றுக் குழாய்களுமே மூன்றில் ஒரு பங்கு இடத்தை அடைத்துவிடும். கப்பல் நீரினுள் மூழ்கும் முன்பு அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு கோபுர வாசலும் மூடப்படும்.கடல் நீர், தொட்டிகளுக்குள் வந்து நிறைந்ததும், கப்பலின் எடை மிகுந்து கீழே செல்லும். இதற்கு சிறகுகளும் உறுதுணையாக செயல்படும். கப்பல் கடலுக்குள் மூழ்கும்போது முன்புறம் தாழ்ந்தும், பின்புறம் உயர்ந்தும் மீனை போல நீந்தி செல்வதுபோல் இருக்கும்.எவ்வளவு ஆழம் செல்ல வேண்டுமோ, அதற்கேற்ப தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப் பட வேண்டும். கப்பல் மேலே வரும் போது, காற்று குழாய்கள் திறக்கப்படும்.காற்றானது நீர்த் தொட்டிகளுக்குள் சென்று அங்கிருக்கும் நீரை வெளியேற்றும். இதனால் கப்பலின் எடை குறைந்து மேலே நீர் மட்டத்திற்கு வரும். கப்பல் வெளியே வரும் போது மீன் வெளியில் வந்து மூச்சு விடுவதை போல் தோற்றமளிக்கும். கப்பலின் உள்ளே எடை ஒரே அளவில் இருக்க வேண்டும். கொஞ்சம் கவனிக்க தவறினாலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.கப்பலின் எடை குறையும் போதெல்லாம் அந்த அளவுக்கு சரியான நீரை தொட்டிகளில் நிரப்ப வேண்டும்.கப்பலின் இரு முனைகளிலும் உள்ள எடை தராசு தட்டுகள் போல் சமமாக இருக்க வேண்டும். நீராவி கருவிகள் கப்பலை நீர் மட்டத்திற்கு இழுத்து செல்வதுடன், வேண்டும் போது காற்றுக் குழாய்களை நிரப்பவும், மின்னாற்றலை புதுப்பிக்கவும் உதவுகின்றன.திடீரென ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்க, காற்று உடைகள் இருக்கும். இவை மூச்சுவிட, கரை சேர உறுதுணை செய்யும். நீர்மூழ்கிக் கப்பலில் செல்பவர்களுக்கு அஞ்சா நெஞ்சமும், வீரமும் வேண்டும்.12 ஆண்டுகளுக்கு முன்பு 'குர்ஸ்க்' என்ற நீர்மூழ்கிக் கப்பல் நீரினுள் மூழ்கியது. அதிலிருந்த 118 பேரும் உயிரிழந்தனர். எந்த தீங்கும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நீர்மூழ்கி கப்பல்களை செயல்பட வைக்க பல அரிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.நீர்மூழ்கிக் கப்பல் என்றாலே அழிக்கும் தொழிலுக்கே முதன்மையாக பயன்படுத்தி வந்த காலம் இப்போது மாறிவிட்டது. இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் ஆழ்கடல் உயிரினங்கள், புவியியல், ஆழ்கடல் தட்பவெப்ப நிலை ஆய்வு, கடல்வழி போக்குவரத்து தகவல், தொழில்நுட்ப ஆய்வு போன்ற பல ஆய்வுகளுக்கு பயன்படுபவையாக நீர் மூழ்கி கப்பல்கள் திகழ்கின்றன.தயிரின் பெருமை!*தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன், வெல்லம் சேர்த்து சாப்பிட உடல் புஷ்டியை தரும்.* உறை ஊற்றிய பின் சில சமயம் நன்கு உறையாமல் இருக்கும். அதாவது பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும் அது வயிற்றில் வேகமாக புளிக்க தொடங்கி பசியை குறைத்து, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாய்ப்புண் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.* மண் சட்டியிலிருந்து புரை குத்திய தயிர்தான் நமது தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. அது கெட்டியாகவும் இருக்கும்.* ஒருபோதும் தயிரை சுட வைத்து சாப்பிடக் கூடாது.* உடலைப் புஷ்டிப்படுத்த விரும்புபவர்கள் வேக வைத்த பச்சைப்பயிறு, நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்.* தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் காணப்படும். இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு மூன்றும் கலந்த சிறந்த பானம். அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் காலை, மாலை கால் டம்ளர் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், களைப்பு, தலைச்சளி ஆகியவற்றை விரட்டும்.* தயிரை துணியில் வடிகட்டி அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்து தயாரிப்பதுதான் ஸ்ரீகண்ட். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.* பசியில்லாதவர்கள் புளிப்பு தலை காட்ட தொடங்கிய தயிரை சாப்பிட்டால் பசியை தூண்டும்.* இரவில் குளர்ச்சியான தன்மையில் தயிரை சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஜீரணக் குறைவு ஏற்படும். அதனால் தான் தயிரை இரவில் உண்ண கூடாது என்கின்றனர்.என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !