அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மிகப்பெரிய புத்தகம்!இன்றும் நாம் படிப்பதற்கு பல புத்தகங்கள் கிடைக்கின்றன. மனித வரலாற்றில் மத்திய காலம் வரை புத்தகம் எதுவும் இருக்கவில்லை. அன்றைய மக்கள் பாப்பிரஸ் எனப்படும் நாணற் காகிதத்தில் எழுதி அவற்றை சுருளாக வைத்து காப்பாற்றினர். ரோமானியர்கள் இவற்றை 'வால்யூமன்' என்றனர். இதிலிருந்து தான் 'வால்யூம்' என்ற சொல் பிறந்தது.ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் மக்கள் ஆட்டுத்தோலை பதப்படுத்தி எடுத்த தோலிலும், கன்றுத் தோலில் இருந்து தயாரித்த மெல்லிய தாளிலும் எழுதத் தொடங்கினர். தோலின் ஒரு பக்கம் மட்டும் எழுதப்பட்டது.மத்திய காலத்தில் பெரும் பான்மையான புத்தகங்கள் லத்தீன் மொழியில் எழுதப்பட்டன. பின்னர் காகிதத்தின் தரம் மேம்பட்டது. அச்சுக்கலையும் வளர்ச்சியுற்றது. இதன் பயனாக புத்தகம் இன்றைய உருவை அடைந்தது. இப்போது வண்ண வண்ணமாக அச்சிடப்பட்ட அழகான புத்தகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.உலகின் மிகப்பெரிய புத்தகம் 'த லிட்டில் ரெட்' இந்த புத்தகம் வில்லியம் பி.உட் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது.7 அடி 2 அங்குல உயரம் கொண்ட இப்புத்தகத்தை திறந்தால் இது பத்தடி நீளத்துக்கு விரியும். 1800 முதல் 1900 வரை பிரிட்டிஷ் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஐரிஷ் பல்கலைக்கழக அச்சகம் 1200 பகுதிகளாக வெளியிட்டுள்ளது.ஒரே விஷயத்தில் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய புத்தகம் இதுவே. இதன் எடை 364 மெட்ரிக் டன். விலை 50 லட்ச ரூபாய். வெளியிட்ட காலம் 1967 முதல் 1971 வரை. தினமும் 10 மணி நேரம் இடை விடாமல் படித்தாலும் இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடிக்க 6 வருடங்கள் ஆகும்.எளிதான குறிப்புகள்!*தலைவலிக்கு மருந்தாக 2 சொட்டு நொச்சி தைலத்தை மூக்கின் துவாரங்களில் தடவலாம். தலையிலும் இந்த தைலத்தை தடவலாம். * குழந்தைகளின் சளிக்கு வெற்றிலை, கருந்துளசி சாற்றை தேனில் கலந்து கொடுக்கலாம் அல்லது வேப்பெண்ணெயை மார்பு, முதுகுப் பகுதியில் தடவலாம்.* சொத்தைப் பல் வலிக்கு சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து பல்லில் வைத்தால் தீவிரமான வலியை உடனே கட்டுப்படுத்தும். பிறகு தகுந்த வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.* காலில் சுளுக்கு வலி ஏற்பட்டால் சூடாக உப்பு, புளி சேர்த்து பற்று போட வேண்டும்.* வயிற்று வலிக்கு வெந்நீரில் நெய், சுக்கு, சர்க்கரை கலந்து கொடுக்க வேண்டும். வலியுள்ள பகுதியில் சூடாக தைலம் தடவுவது நல்லது.* வயிறு, நெஞ்சு எரிச்சலுக்கு உலர்ந்த கறுப்பு திராட்சை, கடுக்காய், சர்க்கரை ஆகியவற்றை சம அளவுசேர்த்து சாப்பிட வேண்டும். அவற்றை அரைத்து வில்லைகளாக்கியும் சாப்பிடலாம். பாலுடன் சுக்கு கலந்து உட்கொள்வதும் நல்லது.* வயிற்று வலிக்கு ஓமத்தை அரைத்து மோரில் கலந்து கொடுத்தால் குணம் கிடைக்கும்.* வாந்தி, குமட்டலுக்கு இஞ்சி சாறு, வெங்காய சாறு கலந்து கொடுக்கலாம்.* இஞ்சி சாற்றில் புதினா, சிறிது உப்பு, வெங்காயம் கலந்து குடித்தால் அஜீரணம், குமட்டல், பசியின்மை, வயிற்று உப்புசம் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.என்றென்றும் அன்புடன், அங்குராசு