உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பறவை எத்தனை இருக்கும்?பறவை நோக்குதலில் (Bird Watching) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இதோ அவற்றைக் கணக்கிடுவதற்கு உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. பறவைகளைப் பாது காப்பதற்கான ஆராய்ச்சிகள், திட்டங்களில் இந்த கணக்கெடுப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.சர்வதேச அளவிலான இந்தக் கணக்கெடுப்புக்கு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுன்ட்) என்று பெயர். பிப்ரவரி 14 முதல் 17 வரை (வெள்ளி முதல் திங்கள் வரை) இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. பறவை நோக்குதலில் ஆர்வம் இருந்தால் போதும். உங்கள் வீட்டு மாடி, புழக்கடை, முன்புறம் உள்ள தோட்டம், வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா, ஏரி, நீர்நிலை போன்ற இயற்கை செழிக்கும் ஏதாவது ஒரு இடம் போதும். குறைந்தபட்சம் 15 நிமிடங்கள், அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறவை களைக் கண்காணித்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். நீங்கள் பார்த்த பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கை போன்ற வற்றைக் குறித்துக் கொள்வது அவசியம். எல்லா பறவைகளையும் அடையாளம் காண முடியாவிட்டாலும் பரவாயில்லை. உங்களால் கண்டு பிடிக்க முடிந்த பறவை வகைகளை பதிவு செய்தால் போதும். இந்தக் கணக்கெடுப்பு பல்வேறு முக்கியக் கேள்வி களுக்கு விடையளிக்க உதவும். இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலைமையை இந்தக் கணக்கெடுப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம்.வாழிட மாறுதல்களால் பறவைகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன. தட்பவெப்பநிலை மாற்றங்கள், பறவைகளின் எண்ணிக்கையும் பரவலும் மாறுகின்றனவா என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.இந்தத் திட்டம் மூலம் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சித் தகவல்களை ஆர்வலர்களாளும் திரட்டித் தர முடிகிறது. இந்தக் கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய மக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு இந்தக் கணக்கெடுப்பில் 111 நாடுகள் பங்கேற்றன. 3.5 கோடி பறவை நோக்கர்கள் 4,000 பறவை வகைகளைப் பதிவு செய்திருந்தனர். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட பறவைகள் பற்றி 400க்கும் மேற்பட்ட பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.இதில் 89 பட்டியல்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. அது நாட்டிலேயே இரண்டாவது அதிகப் பதிவு. உங்கள் பதிவுகளை WWW.BIRDCOUNT.ORGல் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களும் பாருங்கள்: GBBC.BIRDCOUNT.ORGபல் தரும் பர்த் டேட்!இந்தியாவில் பல குழந்தைகளின் பிறந்த தேதி என்னவென்றே தெரிவதில்லை. பிறப்பை முறையாக பதிவு செய்யாததுதான் இதற்கு காரணம். குழந்தைகள் கருவிலிருக்கும் போதே அவர்கள் பற்களுக்கான வேர்கள் முளைக்க ஆரம்பித்து விடுகின்றன. குழந்தை பிறந்த பின் 12 மாதத்தில் பால் பல் முளைக்கிறது. பல் முளைப்பதில் நூற்றுக்கும் மேற்பட்ட பருவங்கள் உள்ளன.இந்த பருவங்களை சோதனை செய்வதன் மூலம் குழந்தைகளின் வயதை கிட்டத்தட்ட சரியாகவே கணக்கிட்டு விட முடியும். இங்கிலாந்தில் குழந்தைகளின் வயதை கண்டு பிடிக்க இந்த முறையைத்தான் பின்பற்றி வருகின்றனர். இந்த முறையின் மூலம் வயதை கணக்கிடும் போது ஆண்களுக்கு 1.5 வாரம் வித்தியாசமும், பெண்களுக்கு 2.6 வார வித்தியாசமும் ஏற்படும்.என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !