உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!தேங்கா - தேங்கா!தேங்காய், நம் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல, சிறந்த மருத்துவப் பொருளும் கூட என்கிறது சித்த மருத்துவம்.தேங்காயில் உள்ள 'பேட்டி ஆசிட்' உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறையில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டி கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி- காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன. தேங்காய்ப் பால், உடல் வலிமைக்கு நல்லது.தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய் களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் தேங்காய் எண்ணெய் பெருமளவு சேர்க்கப்படுகிறது.பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப் போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. தென்னம் பூவும் இதற்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தைச் சேர்த்து, தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.அம்மா - ப்ளீஸ் செஞ்சுத்தாங்கம்மா!இது, பசலைக்கீரை புளிக்கூட்டு செய்முறை நேரம்.தேவையானவை: பசலைக் கீரை - 1 கட்டு, துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 1 கப், காய்ந்த மிளகாய் - 4, உளுந்து -1 டீஸ்பூன், தக்காளி- 2, வெங்காயம் - 1, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு.செய்முறை: பசலைக் கீரையைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். துவரம் பருப்பை வேக வைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் பொடியாக நறுக்கிய பசலைக் கீரையைச் சேர்த்து வதக்கவும். உளுந்து, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து, அவற்றுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வேகும் கீரையில் சேர்க்கவும். புளி கரைத்துச் சேர்த்து கொதித்ததும்,வெந்த பருப்பு, உப்பு சேர்க்கவும். கலவை நன்கு கெட்டியானதும் கடுகு தாளித்து இறக்கினால் அருமையான 'பசலைக் கீரை புளிக்கூட்டு' தயார்.என்றென்றும் அனபுடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !